LIC மாஸ் அறிவிப்பு.! 11-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை.! எப்படி விண்ணப்பிப்பது.?
மத்திய மாநில அரசுகள் மாணவர்களுக்காக வழங்கும் கல்வி உதவித்தொகை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றது.
மாணவர்களின் தகுதிக்கு மற்றும் படிப்பிற்கு ஏற்றவாறு உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் வாழ்க்கையை மற்றும் கல்வியில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கான சூழலை உருவாக்குகின்றன.
மேலும் இந்த நிதியுதவி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தரமான கல்வியை அணுகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சமூகத்திற்கு பங்களிக்கவும் உதவுகிறது. தற்பொழுது எல்ஐசி சார்பில் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது அதற்கான விண்ணப்பங்களும் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
LIC HFL வித்யாதன் ஸ்காலர்ஷிப் 2023 என்பது எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் முன்முயற்சியாகும், இது 11 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு தகுதியாக தற்போது 11 ஆம் வகுப்பு மற்றும் முதல் ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை திட்டங்களில் (2023-24 கல்வியாண்டில்) படிக்கும் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் தங்களது முந்தைய தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் 3,60,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.பரிசுகள் மற்றும் வெகுமதிகள்: வருடத்திற்கு 25,000 ரூபாய் வரை பெறலாம். தகுதியுள்ள நபர்கள் www.b4s.in/it/LHVC11 என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
No comments