நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!
நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!
*நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்ல விருப்பினால் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை அன்று செல்வது மிகச் சிறப்பு.
*குலதெய்வ கோயிலுக்கு செல்லும் முன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு பின்பு கிளம்ப வேண்டும்.
*தங்களால் இயன்ற அளவிற்கு வெல்லம் வாங்கி சென்று கோயிலுக்கு தானம் செய்யலாம். இந்த வெல்லத்தை நம் வீட்டில் ஓர் இரவு வைத்து இருந்து பின் தான் எடுத்து செல்ல வேண்டும். கோயிலுக்கு போகும் வழியில் வாங்கிச் சென்று கொடுக்க கூடாது.
*கோயிலில் இருந்து திரும்பி வரும் பொழுது சிறிது மண் எடுத்து வர வேண்டும். கோயிலில் கால் படாத இடத்தில் உள்ள மண்ணை வீட்டிற்கு எடுத்து வருவது நல்லது. வீட்டிற்கு வந்ததும் அதை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து தூப தீபம் காட்டி வழிபட்ட பின் மற்ற வேலைகளை செய்யவும். அதேபோல் இன்னொரு துணியில் சிறிது முடிந்து வீட்டின் நிலை வாசலின் நடுவில் கட்டி விடவும். அடுத்த முறை கோயிலுக்கு செல்லும் போது இதே போல் மண் கொண்டு வந்து வைத்து வழிபடவும். பழைய மண்ணை செடி அருகில் கொட்டி விடவும். இதை ஒருமுறை செய்து பாருங்கள் நிச்சயம் வீட்டிலும் உங்கள் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
No comments