Breaking News

ஹோம் லோனை விரைவில் அடைக்க உங்களுக்கான டிப்ஸ்..!

ன்றைய கால கட்டத்தில் பலர் ஹோம் லோன் மூலமாக சொந்த வீடு வாங்கி வருகின்றனர். ஹோம் லோன் எடுப்பது ஒரு புதிய வீட்டிற்கான உரிமையை நமக்கு தருவது மட்டுமல்லாமல் வரிச் சலுகைகள், நமது தற்போதைய மற்றும் எதிர்கால நல்வாழ்வை பாதிப்பது முதலான பல்வேறு விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
லோனை திருப்பி செலுத்தும் செயல் முறையை விரைவுப்படுத்துவது பொதுவாக அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. உங்களது ஹோம் லோனை விரைவாக செலுத்த உதவும் சில வழிகளை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்:

மீதம் இருக்கக்கூடிய உங்களது லோன் தொகையை குறைவான வட்டி விகிதம் வழங்கக்கூடிய மற்றொரு வங்கிக்கு நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வது EMI தொகையை குறைத்து நீங்கள் விரைவாக கடனை அடைக்க உதவும்.

சரியான நேரத்தில் EMI பேமெண்ட்கள் செலுத்துவது:

நீங்கள் சரியான நேரத்தில் EMI தொகையை செலுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்ய ஆட்டோ-டெபிட் ஆப்ஷனை எனேபிள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக நீங்கள் தவறுதலாக EMI தொகையை செலுத்த மறந்து விடுவதன் மூலமாக விதிக்கப்படும் அபராத தொகையிலிருந்து தப்பிக்க உதவும்.

கூடுதல் லோன்கள் பெறுவதைத் தவிர்க்கவும்:

ஏற்கனவே ஹோம் லோன் எடுத்திருக்கும் பொழுது, கூடுதலாக வேறு சில லோன்களை வாங்கி விட வேண்டாம். இது உங்களது பொருளாதார பாரத்தை அதிகரிக்கும். மேலும் நீங்கள் சில சமயங்களில் EMI-கள் செலுத்த மறந்து கூட போகலாம்.

பணத்தை சேமித்து திருப்பி செலுத்தவும்:

உங்களது ஹோம் லோனுக்கு கூடுதல் பேமெண்ட்களை செலுத்தும் வகையில் சில கூடுதல் தொகையை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்யும் பொழுது அது உங்களது லோன் பேலன்ஸ் மற்றும் வட்டி வட்டியை குறைக்கும்.

ப்ரீபேமெண்ட்:

வட்டி மற்றும் அசல் தொகை ஆகிய இரண்டையும் கழிக்கும் வகையில் ஒரு பெரிய அளவிலான தொகையை செலுத்துவதன் மூலமாக லோனை திருப்பி செலுத்தும் செயல் முறையை விரைவுப்படுத்துங்கள்.

குறைவான லோன் கால அளவு:

லோன் வாங்கும் பொழுதே குறைவான கால அளவு கொண்ட கடனை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு செய்வது நீங்கள் அதிகப்படியான வட்டி செலுத்துவதை தவிர்க்க உதவும்.

வழக்கமான பேமெண்ட்கள், அதிக EMIகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஒழுக்கம் இருந்தால் மட்டுமே உங்களது சொந்த வீட்டின் கனவை நீங்கள் விரைவாக நிஜமாக்கி கொள்ள முடியும். டேக்ஸ் டிடக்ஷன்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் சரியான முறையில் பொருளாதாரத்தை திட்டமிடுவது போன்ற விஷயங்களை பின்பற்றி உங்களது ஹோம் லோன் பயணத்தை விரைவாக நிறைவு செய்யலாம். மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி உங்களது சொந்த வீட்டு கனவை சீக்கிரமாக நினைவாக்கி கொள்ளுங்கள்.

No comments