Breaking News

பெண்களே தெரிஞ்சிக்கோங்க.. அடர்த்தியான முடிக்கு இந்த ஆறு விதைகள் போதும்.

 


னிதர்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மற்றும் வெளிப்புற மாசுபாட்டின் காரணமாக பெரும்பாலும் முடி சேதமடைகிறது.

அந்தவகையில் அடர்த்தியாகவும், நீளமாகவும் முடி வளர ஊட்டச்சத்து நிறைந்த இந்த 6 விதைகளை சாப்பிட்டாலே போதுமானது.

எள் விதை

கருப்பு மற்றும் வெள்ளை எள் விதைகளில் நிறைந்துள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களால் முடிக்கு வலிமையையும் தருகின்றன.

இவற்றில் லட்டு செய்து சாப்பிடலாம் அல்லது காய்கறி சாலட்களில் இதனை பயன்படுத்தலாம்.

கருஞ்சீரக விதை

கருஞ்சீரக விதைகள் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும், சிறந்த முடி வளர்ச்சிக்கு உதவும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும்.

அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தலைமுடி பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும்.மேலும் உச்சந்தலை தொற்றுக்களை தடுக்கும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் முடி சத்தாகவும், முடியைப் பாதுகாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளதால் முடியை ஆரோக்கியமாக வளர உதவுகின்றன.

வெந்தய விதை

வெந்தய விதைகள் முடி உதிர்வைக் குறைக்கும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன்களை பெற்றுள்ளன. மேலும், இது பொடுகுத் தொல்லையைத் தடுக்கும்.

முடி ஆரோக்கியத்திற்கு உதவும் புரதம், நியாசின், அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பூசணி விதை

பூசணி விதைகளில் துத்தநாகம், செலினியம், தாமிரம், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன.

பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வதைக் குறைக்கவும், முடியை பளபளப்பாகவும் உதவுகின்றன.

ஆளி விதை

ஆளிவிதை முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதற்கு காரணமான இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் முடியின் வேர்களுக்கு நன்மை அளிக்கின்றன.

No comments