Breaking News

மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கணுமா? இந்த பல் பொடியை தினமும் 2 வேளை யூஸ் பண்ணுங்க..


ப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஒருவர் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது முக்கியமோ, அதேப் போல் வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டியதும் அவசியம்.

வெறுமனே தினமும் பற்களைத் துலக்கினால் மட்டும் வாய் சுகாதாரமாக உள்ளது என்று அர்த்தமல்ல.

ஒருவர் தங்களது வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், பல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவர் வாயை சுத்தமாக வைத்துக் கொண்டே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு வாய் தொடர்பான பிரச்சனை தான் மஞ்சள் நிற பற்கள். இந்த மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றில் சில பற்களின் எனாமலை பாதிக்க வாய்ப்புள்ளது. சில சமயங்களில் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கெமிக்கல் கலந்த திரவங்கள் விலை அதிகமாகவும், நல்ல பலனைத் தரக்கூடியதாக இல்லாமலும் இருக்கலாம்.

நீங்களும் இப்படி மஞ்சள் நிறத்தில் பற்களைக் கொண்டிருந்தால், அந்த பற்களை இயற்கை வழியில் வெள்ளையாக்க நினைத்தால், பின்வரும் ஆயுர்வேத பல்பொடியை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள். இதனால் மஞ்சள் நிற பற்களை எனாமலில் எவ்வித சேதமும் இல்லாமல் வெள்ளையாக்கலாம்.

பல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:

* கல் உப்பு - 1 ஸ்பூன்

* கிராம்பு பொடி - 1 ஸ்பூன்

* பட்டைத் தூள் - 1 ஸ்பூன்

* அதிமதுர பொடி - 1 ஸ்பூன்

* காய்ந்த வேப்பிலை - சிறிது

* காய்ந்த புதினா இலை - சிறிது

பல்பொடி தயாரிக்கும் முறை:

ஈரமில்லாத மிக்சர் ஜாரில் கல் உப்பு, கிராம்பு பொடி, பட்டைத் தூள், அதிமதுர பொடி, காய்ந்த வேப்பிலை, காய்ந்த புதினா இலைகளைப் போட்டு நன்கு பொடி செய்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, தேவையான போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.

எப்படி பயன்படுத்துவது?

* முதலில் ஒரு ஸ்பூன் தயாரித்த பல் பொடியை உள்ளங்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் டூத் பிரஷை நீரில் நனைத்து, அந்த பிரஷ் கொண்டு பற்களை தேய்க்க வேண்டும்.

* அதன்பின் வாயை நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி ஒரு வாரம் தொடர்ந்து காலை, இரவு என பயன்படுத்தி வந்தால், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நன்மைகள்

இந்த ஆயுர்வேத பல் பொடியில் உள்ள கல் உப்பு பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, வெள்ளை நிறத்தைத் தரும். அதே சமயம் அதிமதுரம் மற்றும் வேப்பிலை, ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக இந்த பல் பொடி சென்சிடிவ் பற்களை கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பட்டை மற்றும் கிராம்பு பற்கூச்சத்தை தடுக்கிறது.

பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்

* பல் மருத்துவரை சந்திப்பதைத் தவிர்க்காதீர்கள்.

* தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பற்களை துலக்குங்கள்.

* ப்ளாஷிங் செய்வதை தவிர்க்காதீர்கள். அதாவது பற்களின் இடுக்குகளில் உள்ள துகள்களை நீக்க மறவாதீர்கள்.

* பற்களை நீண்ட நேரம் அல்லது அதிகம் அழுத்தி துலக்க வேண்டாம். அப்படி செய்வதன் மூலம் பற்களின் எனாமல் தான் நீங்கும்.

* எப்போதும் பற்களை மென்மையான பிரஷ் பயன்படுத்தி துலக்க வேண்டும்.

* வேண்டுமானால் ஆட்டோமேட்டிக் பிரஷ் வாங்கி பற்களைத் துலக்கலாம். இதனால் பற்கள் இன்னும் சுத்தமாக இருக்கும்.

No comments