அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் மகிழ்ச்சி: டிஏ அரியரால் அதிரடி ஏற்றம், கணக்கீடு இதோ
7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் இருக்கின்றார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. சமீபத்தில் 4 சதவிகிதம் டிஏ உயர்வு என்ற மிகப்பெரிய செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்தது. தற்போது மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசின் சமீபத்திய அப்டேட்டின்படி, மத்திய ஊழியர்களுக்கு ரூ. 30864 டிஏ நிலுவைத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. மத்திய அரசின் இந்த அப்டேட் தொடர்பான முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
பண்டிகைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு பரிசுகளை வழங்கியது. ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிஏ -வை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத சம்பளத்துடன் கூடுதலாக 4 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்
பொதுவாக ஒரு ஆண்டில், ஜனவரி மற்றும் ஜூலை என இரண்டு முறை அக்கவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைபப்டி அதிகரிப்பு ஜூலை 2023 -க்கானது. இது ஜூலை 1, 2023 முதல் வழங்கப்படும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைபப்டி அதிகரிப்பிற்கான 3 மாத அரியர் தொகையும் வழங்கப்படும். டிஏ அரியர் தொகை மொத்தம் எவ்வளவு கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரியர் தொகை எப்போது கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும். ஆனால், இது ஜூலை 1, 2023 முதல் பொருந்தும். எனவே, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும். அனைத்து மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 3 மாத அரியர் தொகையைப் (DA Arrears) பெறுவார்கள்.
புதிய ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியானது ஊதியக்குழுவின்படி கணக்கிடப்படும். லெவல் 1 -இல் உள்ள ஊழியர்களின் தர ஊதியம் (Grade Pay) ரூ.1,800. அடிப்படை ஊதியம் ரூ.18,000. இது தவிர பயணப்படியும் (TA) இதில் சேர்க்கப்படுகிறது. இதன் பின்னரே நிதி பாக்கிகள் முடிவு செய்யப்படும்.
டி அரியர் கணக்கீட்டை இப்படி புரிந்து கொள்ளலாம்
லெவல் -1 ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமான ரூ. 18,000 -க்கான கணக்கீடு
- லெவல்-1 கிரேடு பே-1,800 -இல் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000.
- இந்த ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு காரணமாக, மொத்த டிஏவில் ரூ.774 வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
மாத வாரியாக டிஏ அரியர் தொகையின் கணக்கீடு இதோ:
ஜுலை 2023: (DA+TA-46%) - ரூ.10251, (DA+TA-42%) - ரூ.9477, (DA+TA=அரியர்) - ரூ.774
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.10251, (DA+TA-42%) - ரூ.9477, (DA+TA=அரியர்) - ரூ.774
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.10251, (DA+TA-42%) - ரூ.9477, (DA+TA=அரியர்) - ரூ.774
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ. 2322
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.10251, (DA+TA-42%) - ரூ.9477, (DA+TA=அரியர்) - ரூ.774
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.10251, (DA+TA-42%) - ரூ.9477, (DA+TA=அரியர்) - ரூ.774
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ. 2322
லெவல் -1 ஊழியர்களின் அதிகபட்ச சம்பளமான ரூ. 56,900 -க்கான கணக்கீடு
- லெவல்-1 கிரேடு பே-1,800 -இல் மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900.
- இந்த ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு காரணமாக, மொத்த டிஏவில் ரூ.2420 வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
மாத வாரியாக டிஏ அரியர் தொகையின் கணக்கீடு இதோ:
ஜுலை 2023: (DA+TA-46%) - ரூ.31430, (DA+TA-42%) - ரூ.29010, (DA+TA=அரியர்) - ரூ.2420
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.31430, (DA+TA-42%) - ரூ.29010, (DA+TA=அரியர்) - ரூ.2420
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.31430, (DA+TA-42%) - ரூ.29010, (DA+TA=அரியர்) - ரூ.2420
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ.7260
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.31430, (DA+TA-42%) - ரூ.29010, (DA+TA=அரியர்) - ரூ.2420
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.31430, (DA+TA-42%) - ரூ.29010, (DA+TA=அரியர்) - ரூ.2420
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ.7260
லெவல் -10 ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமான ரூ.56,100 -க்கான கணக்கீடு
- லெவல்-10 கிரேடு பே-5400 -இல் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,100.
- இந்த ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு காரணமாக, மொத்த டிஏவில் ரூ.2532 வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
மாத வாரியாக டிஏ அரியர் தொகையின் கணக்கீடு இதோ:
ஜுலை 2023: (DA+TA-46%) - ரூ.36318, (DA+TA-42%) - ரூ.33786, (DA+TA=அரியர்) - ரூ.2532
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.36318, (DA+TA-42%) - ரூ.33786, (DA+TA=அரியர்) - ரூ.2532
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.36318, (DA+TA-42%) - ரூ.33786, (DA+TA=அரியர்) - ரூ.2532
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ.7596
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.36318, (DA+TA-42%) - ரூ.33786, (DA+TA=அரியர்) - ரூ.2532
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.36318, (DA+TA-42%) - ரூ.33786, (DA+TA=அரியர்) - ரூ.2532
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ.7596
கேபினட் செயலாளர் மட்டத்தில் டிஏ அரியர் எவ்வளவு கிடைக்கும்?
லெவல் 18 -இல் தர ஊதியம் இல்லை. இங்கு சம்பளம் நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேபினட் செயலாளரின் சம்பளம் 2,50,000 ரூபாயாக உள்ளாது. அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்ததால், மொத்த வித்தியாசம் ரூ.10288 ஆக இருக்கும். இதற்கான கணக்கீட்டை காணலாம்.
ஜுலை 2023: (DA+TA-46%) - ரூ.125512, (DA+TA-42%) - ரூ.115224, (DA+TA=அரியர்) - ரூ.10288
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.125512, (DA+TA-42%) - ரூ.115224, (DA+TA=அரியர்) - ரூ.10288
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.125512, (DA+TA-42%) - ரூ.115224, (DA+TA=அரியர்) - ரூ.10288
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ.30864
ஆகஸ்டு 2023: (DA+TA-46%) - ரூ.125512, (DA+TA-42%) - ரூ.115224, (DA+TA=அரியர்) - ரூ.10288
செப்டம்பர் 2023: (DA+TA-46%) - ரூ.125512, (DA+TA-42%) - ரூ.115224, (DA+TA=அரியர்) - ரூ.10288
மொத்த டிஏ அரியர் தொகை - ரூ.30864
மத்திய அரசு ஊழியர்களின் பே பேண்ட் விவரங்கள்:
7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம், லெவல் 1 முதல் லெவல் 18 வரை வெவ்வேறு தர ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கிரேடு பே மற்றும் பயணப்படி அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. லெவல் 1 இல், குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதில் அதிகபட்ச சம்பளம் 56,900 ரூபாயாகும். இதேபோல், சம்பளம் தர ஊதியத்தின் படி லெவல் 2 முதல் 14 வரை மாறுபடும்.
எனினும் லெவல் 15, 17, 18 -தர ஊதியம் இல்லை. இங்கு சம்பளம் நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெலவ் -15 இல், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 182,200 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ. 2,24,100 ஆகவும் உள்ளது. லெவல்-17ல் அடிப்படை சம்பளம் ரூ.2,25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெவல்-18 -இலும் அடிப்படை சம்பளம் ரூ.2,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் பார்த்தால், அனைத்து லெவல் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அலவிலைபப்டி அரியர் தொகையின் வடிவில் பண்டிகை காலத்தில் ஒரு மிகப்பெரிய தொகை கைக்கு வரவுள்ளது.
No comments