Breaking News

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!


தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கடந்த வருடம் நவம்பர் மாதம் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்பின் அரையாண்டு விடுமுறையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 3ம் தேதி வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் ஜனவரி 3ம் தேதி முதல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

அத்துடன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்பதால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுகம் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் 20 மாதங்களுக்கு பிறகு தனியார் பள்ளிகளை திறப்பதால் அதிகளவு கடன்களை பெற்று பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பள்ளிகளை மீண்டும் திறக்க தடை விதித்துள்ளது.

அத்துடன் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீடுகளிலும், தெருக்களிலும் மாணவர்கள் நடமாடுகின்றனர். இதனை தொடர்ந்து குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆதலால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர வழிகாட்டுதல்களுடன் பள்ளிகளை திறக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பள்ளிகளை நடத்த அனுமதிக்கலாம். ஒரு வகுப்பில் 10 அல்லது 20 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து பள்ளிகளை முழுவதுமாக மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

No comments