Breaking News

Teachers Transfer 2022 - மாநிலம் முழுவதும் ஜன., 21ல் BEO அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் !

Teachers Transfer 2022 - மாநிலம் முழுவதும் ஜன., 21ல் BEO அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் !

வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்; ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் தகவல்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜன., 21ல் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் தெரிவித்தார்.

மாநில பொது செயலாளர் கூறியதாவது:பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தவும், ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் மாறுதல் செய்த ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு முன் பழைய இடத்தில் பணியமர்த்த வேண்டும்.

புதிய மாவட்டங்களில் ஒன்றிய எல்லை வரையறையில் வேறு ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பிற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் சொந்த ஒன்றியத்திற்கு செல்ல வாய்ப்பு தர வேண்டும்.


கடந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெறாததால் 2020-2021 ம் கல்வியாண்டின் காலிப்பணியிடங்களுக்கு 1.1.2020 முன்னுரிமையின்படியும், 2021-2022ல் ஏற்பட்ட காலியிடங்களுக்கு 1.1.2021 முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு உபரி பணியிட மாறுதலில் வேறு ஒன்றியங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் சொந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேவைக்கு ஏற்ப ஈர்த்து கொள்ள வேண்டும். மலைசுழற்சி மாறுதல் அரசாணை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும்.

1.1.2022 ல் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்,மாணவர் விகிதம் கணக்கிட்டு ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும்.எமிஸ்சில் ஆசிரியர்களின் அன்றாட கற்பித்தல் பணி பாதிக்கும் வகையில் தேவையாற்ற பதிவுகளை மேற்கொள்ள நிர்பந்திப்பதையும், அதிக பதிவேடுகளை பராமரிக்க கூறுவதை கைவிட வேண்டும்.

கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கும் நேரடி பயிற்சியை கைவிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்

No comments