ஒரு அருமையான உடல்நலக்குறிப்பு உடனடியாக செய்து அனைத்து பலன்களையும் பெறுங்கள் ஆரோக்கியத்துக்கு.. சருமத்துக்கு.. முடிக்கு.. கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா?
கொய்யா இலை நம் ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அதுமட்டுமின்றி, அவற்றை அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
கொய்யா பழம் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு சூப்பர்ஃபுட் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா இலைகளில் பல ஆரோக்கியமான பண்புகள் உள்ளன.
கொய்யா இலை தேநீர்
கொய்யா இலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், பல ஆண்டுகளாக மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த தேநீர் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இலைகளை ஊறவைக்கவும். அவ்வளவு தான். கொய்யாலை இலை தேநீர் தயார்! இது செய்வதற்கு மிகவும் எளிமையானது.
வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்களுக்கு, கொய்யா இலை தேநீர் அருந்தினால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
கொய்யா இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது, எனவே, நீங்கள் லேசான சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், கொய்யா இலை தேநீர் குடிக்கலாம். இது சுவாச பாதை, தொண்டை மற்றும் நுரையீரலில் இருந்து சளியை அகற்ற உதவும்.
மேலும், தேநீர் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
சருமத்துக்கு: உங்கள் தோலின் அமைப்பை மேம்படுத்தவும், முகப்பரு வடுக்களை அகற்றவும், கொய்யா இலை சிறந்ததாக இருக்கும். கொய்யா இலைகளை நசுக்கி அதன் சாற்றை, முகத்தில் தடவவும். சில நாட்களில் நீங்களே வித்தியாசத்தை பார்ப்பீர்கள்!
No comments