Breaking News

Transfer Counselling - விடை தெரியாத கேள்விகள்??????

 தெரியாது. . . .

இல்லை. . . .

பதிலே தலைப்பானதே அடடே ஆச்சரியக்குறி!!!!!


திடீரென அதிகாலை 5 மணிக்கு முழிப்புத்தட்டி எனக்குள்ளே பல கேள்விகள். விடை காண தேடிப் பார்த்தால் விடையாக வந்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். நீங்களும் வினவிப்பாருங்களேன். . . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


*Transfer Norms அரசாணை அரசால் தமிழில் வெளியிடப்பட்டதா?*


A) தெரியாது  B) இல்லை



*அரசாணை குறித்து தாங்கள் முழுமையாகப் புரிந்துள்ளீர்களா?*


A) தெரியாது  B) இல்லை


அரசாணையில் முன்னுரிமைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்ட Single Women என்பதற்கு முதிர்கன்னி என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பா?


A) தெரியாது  B) இல்லை


அரசாணை தொடர்பான குழப்பங்கள் தெளிவாகிவிட்டதா?


A) தெரியாது  B) இல்லை


அரசாணை தொடர்பான குழப்பங்களைத் தெளிவாக்க துறைரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா?


A) தெரியாது  B) இல்லை


Unit & Mutual Transfer-க்கு புதிய மாதிரி படிவம் வெளியிடப்பட்டதா?


A) தெரியாது  B) இல்லை


Unit Transfer உள்ளதா?


A) தெரியாது  B) இல்லை


Mutual Transfer-க்கு விண்ணப்பிப்பது எப்படி?


A) தெரியாது  B) இல்லை


31.12.21 முதல் EMIS-ல் Transfer Application பதிவேற்றும் வசதி இருந்ததா?


A) தெரியாது  B) இல்லை


31.12.21 - 05.01.22 வரை Transfer Application சார்பான நடைமுறை என்ன?


A) தெரியாது  B) இல்லை


Transfer-க்கு எத்தனை Application கொடுக்க வேண்டும்?


A) தெரியாது  B) இல்லை


எதெல்லாம் Priority Block?


A) தெரியாது  B) இல்லை


Priority Block-ல் இருப்போர் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாமா?


A) தெரியாது  B) இல்லை


மலைச்சுழற்சியில் ஏறியவர்கள் நிலை என்ன?


A) தெரியாது  B) இல்லை


மலைச்சுழற்சிப் பகுதிகள் அனைத்தும் Priority Block-ல் வருமா?


A) தெரியாது  B) இல்லை


புதிதாக பிரிந்த மாவட்டங்களில் ஆசிரியர் முன்னுரிமை என்ன ஆனது?


A) தெரியாது  B) இல்லை


ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் மாறுதல் அளிக்கப்பட்டோர் மீண்டும் பணியேற்க வசதி செய்யப்பட்டதா?


A) தெரியாது  B) இல்லை


5.1.22-மாலை முதல் EMIS-ல் Transfer Application ஏற்றலாமா?


A) தெரியாது  B) இல்லை


EMIS-ல் பதிவேற்ற அலுவலக ரீதியான அறிவிப்பு தமிழகம் முழுக்க வெளியிடப்பட்டுவிட்டதா?


A) தெரியாது  B) இல்லை


Unit Transfer-க்கு EMIS-ல் வசதி உள்ளதா?


A) தெரியாது  B) இல்லை


Mutual Transfer-க்கு EMIS-ல் வசதி உள்ளதா?


A) தெரியாது  B) இல்லை


ஒன்றியத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியேயும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க EMIS-ல் வசதி உள்ளதா?


A) தெரியாது  B) இல்லை


பிரிட்டிஸ் ஆட்சிகால / சமஸ்தான அமைப்பு முறையிலேயே பணி வரன்முறை செய்யப்பட்டுவிட்டதா?


A) தெரியாது  B) இல்லை

EMIS-ல் விண்ணப்பமும் முன்னுரிமை விபரமும் பிழையின்றி உள்ளதா?

A) தெரியாது  B) இல்லை

இனியும் புதிதாக கேள்விகள் தோன்றுமா?

A) தெரியாது  B) இல்லை

இப்படியொரு பதிலை சொல்றதுக்கு எனக்கும் சங். . .கட்டமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்ண, தெரியாது / இல்லை என்பதுதான் தெரிந்த பதிலாக உள்ளது. இதைத் தவிர்த்து கூடுதல் பதில் யாருக்கேனும் தெரிந்தால் மகிழ்ச்சியே!


_மகிழ்ச்சியை எதிர்நோக்கி_

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments