Breaking News

28 நாட்கள் வேலிடிட்டி தொல்லை இனி இல்லை.. செல்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்ட டிராய்.. குட்நியூஸ் :

 


டேரிஃப் காலம்

சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேரிஃப் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருந்தன. இதனால் வருடத்திற்கு 12 முறை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

28 நாட்கள் வேலிடிட்டி

ஆனால் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை 28 நாட்களாக குறைத்து இதன் காரணமாக வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர். இதுதொடர்பான புகார்கள் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடி

வாளம் போடும் டிராய் அமைப்புக்கு அதிகமாக வந்தது. இந்த நிலையில் ப்ரீப்பெய்ட் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டுமென தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

டிராய் உத்தரவு

அதன்படி திட்ட வவுச்சர், சிறப்பு டேரிஃப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு மேற்கொள்ளும் எண்ணிக்கை 12 ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த முடிவுக்கு இந்தியா முழுவதும் உள்ள செல்போன் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தன்னிச்சையாக உயர்த்திய சேவை கட்டண உயர்வை குறைக்கவும் ட்ராய் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

No comments