11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19-ம் தேதி திருப்புதல் தேர்வா ?
11ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தகவல் தவறானது !
11ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தகவல் தவறானது !& பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை பொதுத்தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கிலும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தேர்வுகள் துறை இயக்குனர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். அந்த ஆணையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே திருப்புதல் தேர்வு என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
 
    ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் 
திருப்புதல் தேர்வு என்று தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டது போல ஓர் 
அட்டவணை மற்றும் பாடத்திட்டம் சுற்றி வருகின்றது. இது முற்றிலும் தவறான 
தகவல் இது பள்ளிக்கல்வித்துறையால் அல்லது தேர்வுகள் துறையால் வெளியிடப்படவில்லை.
 இது ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் நம்பவேண்டும் என்பதற்காக 
அரசு தயாரித்ததை போல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு அரசு வெளியிட்ட அந்த கால 
அட்டவணையை அப்படியே காப்பி செய்து அதில் வகுப்பு என்னுமிடத்தில் 12ஆம் 
வகுப்பிற்கு பதிலாக 11ஆம் வகுப்பு என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
    இதை நம்பி பல தனியார் பள்ளிகளும் அரசிடமிருந்து வினாத்தாள்கள் 
அனுப்பப்படும் என்று கருதி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் 19ஆம் தேதி 
திருப்புதல் தேர்வு உண்டு என்று தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான தகவல் 
என்னவென்றால் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு அரசிடமிருந்து எந்த வினாத்தாளும் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் திருப்புதல் தேர்வு இருக்கு வராது.
 ஏனென்றால் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்ட ஆணையில் பத்து மற்றும் 
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வினாத்தாள்கள் அனுப்பப்படும் 
என்று தெரிவித்திருந்தது. 
      சமூக வலைதளங்களில் பரவி வரும் பாடத்திட்டம் மற்றும் அட்டவணை போலியானது.
 இந்த தகவலை தங்களுக்கு தெரிந்த பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரிய 
பெருமக்களுக்கும் பகிரவும். மேலும் பள்ளிக்கல்வித்துறையை தேர்வுகள் துறையோ 
எந்த இடத்திலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை என்ற தகவலை வெளியிடவில்லை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் மட்டுமே அலிக்கப்பட்டு வருகின்றது.
 
      பதினோராம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து தங்களை பொதுத் தேர்விற்கு 
தயார் படுத்திக் கொள்ளவும் ஏனென்றால் அரசு எப்போது எந்த முடிவை வெளியிடும் 
என்று யாருக்கும் தெரியாது. பதினோராம் வகுப்பு மதிப்பெண் எந்த இடத்திலும் 
தேவைப்படாது என்றாலும், 11 ஆம் வகுப்பிலேயே பனிரெண்டாம் வகுப்பில் நீங்கள் 
பையிலவிருக்கும் பாடத்திட்டத்திற்கான அடிப்படை அனைத்தும் உள்ளது. 
எனவே பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் 
மாணவர்கள் புரிந்து கற்க வேண்டும் அப்படி புரிந்து கற்றால் மட்டுமே அடுத்த 
கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டம் அனைத்தும் அவர்களுக்கு 
புரியும்.
 
       ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் 
படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் 
விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் 
kalvikadal.in@gmail.com என்ற Email  முகவரிக்கோ அல்லது (Whatsapp , 
Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ  அனுப்பலாம். நீங்கள் 
விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது 
வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் 
செய்யப்படும் . 
 
No comments