Breaking News

TNPSC ரூ.56100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது மீன்வளத்துறை மற்றும் தொழில்துறை ஆகிய வற்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புகளை நடத்த இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

TNPSC தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகள் மூலம் ஆட்சேர்ப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் உயர்மட்ட பணியிடங்கள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரையிலும் அனைத்து பணியிடங்களுக்குமான தேர்வுகள் TNPSC வாரியத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள TNPSC தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மீன்வளத்துறை மற்றும் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான காலியிடம், பதவி, விண்ணப்ப முறை, வயது மற்றும் கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம். அந்த வகையில் முதலாவதாக,

பதவி: உதவி இயக்குனர் – மீன்வளம்

காலியிடங்கள்: 2

வயது வரம்பு:

01.07.2021 அன்று 33 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
மேலும் SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC மற்றும் BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து M.F.Sc., Zoology அல்லது Marine Biology யில் பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்பு, M.Sc (Bio-Technology) பட்டபடிப்புடன் B.F.Sc., M.A அல்லது M.Sc (Zoology) அல்லது Marine Biology யில் பட்டப்படிப்புஅவசியம்.

சம்பளம்: ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை.

தேர்வுமுறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், இதில் எழுத்துத் தேர்வு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு மற்றும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, பொது அறிவு உள்ளிட்ட 2 தேர்வாக நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

எழுத்து தேர்வு நாள் : 12.03.2022

பதவி – வேதியியலாளர்

காலியிடங்கள்: 3

வயதுத்தகுதி:

01.07.2021 அன்று 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc (Chemistry / Chemical Technology / Industrial Chemistry) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை.

தேர்வுமுறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,
இதில் எழுத்துத் தேர்வு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு மற்றும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, பொது அறிவு உள்ளிட்ட 2 தேர்வாக நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
எழுத்து தேர்வு நாள் :19.03.2022

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150
நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 150
ஆனால் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பமுறை:

இப்போது TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம்.

கடைசி தேதி:

உதவி இயக்குனர் மீன்வளத்துறை : 21.01.2022
வேதியியலாளர்: 23.01.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments