Breaking News

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 18, 2023) வருமானம் அதிகரிக்கும் நாளாக அமையக்கூடும்.!


இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் கைகூடும் நாளாக அமையும். தந்தையின் ஆசியுடன் நினைத்த காரியங்களைத் தொடங்கினால் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

அபாயகரமான முதலீடுகளில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரக்கூடும். வருமானமும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் அல்லது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலைகளில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம் - நெய் மற்றும் சர்க்கரை கலந்து பசுவிற்குக் கொடுக்கவும்.


ரிஷபம்: உங்களது பார்ட்னருடனான வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் நாள் இன்று. தந்தையின் ஆலோசனையின் படி நடப்பது வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான இருக்கும் சூழல் அமையும். உறவினர்கள் வழியில் பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கக்கூடும்.
பரிகாரம் - முதற்கடவுள் கணபதியை வழிபடவும்


மிதுனம்: இன்றைக்கு முதலீடுகளில் அதிக லாபம் உண்டாகும் நல்ல நாள். புதிய மொபைல், புதிய ஆடைகள் போன்றவற்றை ஷாப்பிங் செய்வதற்கான வாய்ப்புகள் அமையக்கூடும். நீண்ட காலமாக வியாபாரத்தில் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.
பரிகாரம் - குல தெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளவும்.


கடகம்: பொருளாதார நிலையில் வலுப்பெறும் நாள் இன்று. எதிர்காலத்தைப் பற்றி உங்களது கவலைகள் குறையக்கூடும். தகுதியானவர்களிடமிருந்து நல்ல சலுகைகள் உங்களுக்கு வரக்கூடும். நண்பர்களின் வழியில் நல்ல செய்திகள் வரக்கூடும்.
பரிகாரம் - விநாயகப் பெருமானுக்கு லட்டு பிரசாதம் படைத்து வழிபடவும்.


சிம்மம்: அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். ஆக்கப்பூர்வமான வேலைகளை முடிக்க அருகாமை மற்றும் தூரப் பயணச் சூழல் நிலவும். உறவினர்களின் வழியில் நல்ல செய்தி வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம் - எறும்புகளுக்கு உணவளிக்கும் விதமாக அரிசி மாவு கலந்து கோலமிடவும்.


கன்னி: இன்றைக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பு அதிகரிக்கும் நாளாக அமையக்கூடும். உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மாமியார் வீட்டாரர்கள் யாராவது உங்களிடம் கடன் வாங்கியிருந்தால், அதுவும் இன்று உங்களுக்குத் திருப்பித் தரப்படும். தேவையில்லாத பேச்சுகளை பேசாதீர்கள். இதன் மூலம் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.
பரிகாரம் - விநாயக மந்திரத்தை உச்சரித்து வழிபாடுகள் நடத்தவும்.


துலாம்: குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் இன்றைக்கு அமையக்கூடும். பல நாள்களாக நிலவில் இருந்து வந்த வீட்டு வேலைகள் அனைத்தும் இன்று எளிதாக முடிவடையும். அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், நீங்கள் சொல்வதைக் கேட்பதோடு, அந்த ஆலோசனைப் படி நடப்பார்கள். வேலைவாய்ப்பில் இருப்பவர்களின் முயற்சி வெற்றியடையும்.
பரிகாரம் - குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.


விருச்சிகம்: மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக இன்றைக்கு அமையும். உத்தியோகத்தில் இருப்பர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான ஏதேனும் சட்ட பிரச்சனைகள் இருந்தால், தீர்வு காண்பீர்கள். பொருளாதார ரீதியாக இன்றைக்கு சிறந்த நாள் இன்று. உங்களின் வசதிக்காக கொஞ்சம் பணம் செலவழித்தாலும், உங்கள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
பரிகாரம் - துர்க்கை அம்மனை வழிபடுதல் நல்லது.


தனுசு: இன்றைக்கு பொருளாதார நிலை மேம்படும். உதவிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தில் நல்ல பலனை நீங்கள் அடைவீர்கள். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான நல்ல செய்திகள் இன்றைக்கு உங்களைத் தேடி வரக்கூடும்.
பரிகாரம் - ஏழை, எளிய மக்களுக்குத் தானம் செய்யவும்.


மகரம்: அலுவலக செயல்பாடுகள் உங்களின் சிந்தனைக்கு முரணாக அமையக்கூடும். சக ஊழியர்கள் அல்லது பணியாளர்கள் உங்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இருந்தப் போதும் உங்களின் புரிதலின் அடிப்படையில் அனைத்து சவால்களையும் எளிதாக சமாளிக்கும் திறன் ஏற்படும். அலுவலகத்தில் அதிக வேலைகள் வழங்கப்பட்டாலும், உரிய நேரத்தில் முடிக்கக்கூடிய மனநிலை உங்களுக்கு ஏற்படும். இதனால் அதிகாரிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபடவும்.


கும்பம்: அரசியலில் தொடர்புடையவர்கள் இன்று முன்னேற்றத்திற்கான சிறப்பான வாய்ப்புகளைப் பெறக்கூடிய நாளாக அமையும். மாநிலத்திற்கு வெளியே வியாபாரம் செய்யும் பூர்வீகவாசிகளுக்குப் பண பலன்களுடன் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் சில வேலைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்தால், அதுவும் இன்றே முடிவடையக்கூடும். இதனால் வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். இன்று நீங்கள் உங்கள் தடைப்பட்ட பணத்தை பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
பரிகாரம் - விநாயகரை வணங்கி தாய் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.


மீனம்: இன்றைக்கு வருமானம் அதிகரிக்கும் நாளாக அமையக்கூடும். வெளிநாட்டில் இருந்து வியாபாரம் செய்கிறீர்கள்? என்றால் நல்ல செய்திகள் உங்களுக்கு வரக்கூடும். வியாபாரத்தில் ஏதேனும் புதிய முயற்சி எடுக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக இன்றைக்கே அதை மேற்கொள்ளு ங்கள். இதனால் எதிர்காலத்தில் முழுப் பலனையும் இன்றே அடைவீர்கள். வீடு, கடை வாங்க நினைத்தால் அதுவும் இன்றே முடியக்கூடிய நல்ல நாள் இன்று.
பரிகாரம் - பெற்றோரின் ஆசி பெற்று விநாயகரை வணங்குவதால் நன்மை உண்டாகும்.

No comments