Breaking News

இன்று இரவு 8.37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் சூப்பர் மூன் – பார்க்க தவறவிடாதீர்கள்!

IMG_20230830_144418

வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக இன்று இரவு 8.37 மணியளவில் நிலா நீல நிறத்தில் காட்சியளிக்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் மூன்:

பௌர்ணமி நிலவை விட வழக்கத்திற்கும் அதிகமாக நிலா இன்று கூடுதல் வெளிச்சத்துடன் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சூப்பர் மூன் எனப்படும் அதிவெளிச்சமான நிலவினை இன்று இரவு 8.37 மணி அளவில் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தென்படும்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே இரண்டு பௌர்ணமிகள் இருக்கும் நிலையில் பூமிக்கு மிக அருகில் மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 444 கிலோமீட்டர் தூரத்தில் வந்து நிலவு நீல நிறத்தில் பிரகாசிக்க இருக்கிறது. அதாவது, வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக அல்லது சூரியனிடமிருந்து வரும் சிவப்பு ஒளியை தடுக்கும் வகையில் ஏதேனும் கதிர் குறுக்கே வருவதால்தான் சந்திரன் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.!

மக்களே.. இன்று 8:37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் ப்ளூ மூனை பார்க்க மறந்து விடாதீர்கள். பின்னர், பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்த சூப்பர் மூனை மீண்டும் பார்வையிட முடியும்.

No comments