Breaking News

தினமும் ரூ.53 சேமித்தால் ரூ.6.62 லட்சம் தேடி வரும்... பெண்களுக்கு LIC கொடுக்கும் சூப்பர் பாலிசி!


வாடிக்கையாளர்களின் தேவைகளை பொருத்து பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியாவை (The Life Insurance Corporation of India - LIC) அடித்துக் கொள்ள முடியாது.
அப்படி லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று LIC ஆதார் ஷிலா பாலிசி (LIC Aadhar Shila policy). இது குறிப்பிடத்தக்க வருமானம் பெறக்கூடிய நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டம் பிரத்தியேகமாக பெண்களுக்கான பொருளாதார தேர்வுகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் ஷிலா பிளான் பிற திட்டங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

நான் லிங்க்டு, பர்சனல் லைஃப் இன்சூரன்ஸ் ஸ்கீம் -இன் கீழ் வரக்கூடிய LIC ஆதார் ஷிலா பிளான் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மெச்சூரிட்டியின் போது ஃபிக்சட் பே-அவுட் வழங்குவது முதல் பாலிசிக்காலத்தில் பாலிசிதாரர் இறந்துவிடும் பட்சத்தில் அவரது குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி வழங்குவது வரை பல்வேறு விதமான நன்மைகளை இந்த பாலிசி அளிக்கிறது.

சிறப்பு தகுதி வரம்பு மற்றும் அம்சங்கள்:

பெண்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஆதார் கார்டு வைத்திருக்கக்கூடிய 8 முதல் 55 வரையிலான பெண்கள் பலனடையலாம். 8 வயது பெண் குழந்தை கூட இந்தத் திட்டத்தில் பாலிசிதாரராக மாறலாம். இந்த பாலிசிக்கான கால அளவு 10 வருடங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளது. இன்சூர் செய்யப்பட்ட தொகை குறைந்தபட்சமாக 2 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை உள்ளது. மேலும் இந்த பாலிசியை வைத்துள்ளவர்கள் மூன்று வருடங்கள் கழித்து லோன்களை பெற்றுக் கொள்ளலாம்.

மெச்சூரிட்டி பே-அவுட்டுகள்:

21 வயது பெண் ஒருவர் ஜீவன் ஆதார் ஷிலா பாலிசியை 20 வருட காலத்திற்கு தேர்வு செய்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்டுவாரியான பிரீமியமாக ரூபாய் 18,976 (மாதத்திற்கு ரூபாய் 1,600 அல்லது ஒரு நாளைக்கு ரூபாய் 53), செலுத்துவதன் மூலம் இவர் 20 வருட காலத்திற்கு மொத்தமாக கிட்டத்தட்ட 3.8 லட்ச ரூபாயை செலுத்தி இருப்பார். மெச்சூரிட்டியாகும் பொழுது இவருக்கு ரூபாய் 6.62 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் அடிப்படை உறுதியளிக்கப்பட்ட தொகையாக ரூபாய் 5 லட்சம் மற்றும் லாயல்டி போனஸ் ஆக ரூபாய் 1,62,500 வழங்கப்படுகிறது.

கணக்கீடு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரீமியம் மற்றும் மெச்சூரிட்டி கணக்கீடுகள் சுட்டிக்காட்டுவதற்காக சொல்லப்பட்டவை. 8 வயது பெண் குழந்தைக்கு வித்தியாசமான கணக்கீடுகள் பொருந்தும். எனவே துல்லியமான விவரங்களுக்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள LIC அலுவலகத்தை அணுகவும். முக்கியமான இந்த பாலிசி மெச்சூரிட்டி தொகைக்கான ஆண்டுவாரியான இன்ஸ்டால்மெண்ட் பேமெண்ட்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமினி பலன்கள்:

ஒருவேளை பாலிசிதாரர் பாலிசி காலத்தில் உயிரிழக்க நேர்ந்தால், நாமினி உறுதி அளிக்கப்பட்ட தொகையை பெறுவார். இந்த தொகை ஆண்டுவாரையான பிரீமியத்தில் 7 மடங்கு அல்லது உறுதியளிக்கப்பட்ட தொகையின் 110 சதவீதமாக வழங்கப்படும். இந்த திட்டம் மூலமாக மெச்சூரிட்டி உறுதி அளிக்கப்பட்ட தொகைக்கு கூடுதலாக லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பொதுவாக சொல்லப்பட்டவை. தனிநபர் சார்ந்த விவரங்களுக்கு நீங்கள் கட்டாயமாக LIC ரெப்ரசென்டேட்டிவ்களை அணுக வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

No comments