Breaking News

கடன் EMI தவறவிட்டுவிட்டீர்களா? அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

 


நீங்கள் லோன் (ஹோம்/கார்/பர்சனல்), EMI போன்றவற்றை செலுத்த தவறினால் வங்கியின் பாலிசிகள், லோன் வகை மற்றும் குறிப்பிட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் பலவித விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
ஒவ்வொரு வங்கியின் பாலிசிகள் மற்றும் செயல்முறைகள் வெவ்வேறு மாதிரியானதாக இருக்கும், எனவே நீங்கள் EMI பேமெண்ட் செலுத்த தவறவிட்டால் அது குறித்த விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள உங்களது லோன் அக்ரீமெண்ட்டை ஒருமுறை சரிபார்க்கவும் அல்லது நேரடியாக வங்கியை அணுகவும். ஒருவேளை நீங்கள் EMI செலுத்த தவறியதால் உங்களுக்கு குறிப்பிட்ட விதிகளை மீறி அநியாயம் இழைக்கப்படுகிறது எனில் அது குறித்த புகாரை நீங்கள் RBI-க்கு தெரிவிக்கலாம்.

பொதுவாக நீங்கள் லோனுக்கான EMI செலுத்த தவறினால் பின்வரும் விஷயங்கள் நடக்கலாம்:

தாமதமாக செலுத்தியதற்கான கட்டணங்கள்: நீங்கள் EMI செலுத்த தவறிவிட்டால் லேட் பேமெண்ட் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகை உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வங்கியை பொறுத்து அல்லது உங்களின் EMI தொகையை பொருத்து மாறுபடலாம்.

எதிர்காலத்தில் லோன் பெறுவதில் சிக்கல்: எதிர்காலத்தில் நீங்கள் அதே வங்கியை அல்லது பிற நிதி நிறுவனங்களில் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது நீங்கள் தவறவிட்ட இந்த EMI பேமெண்ட்கான வரலாறு உங்களுக்கு கிடைக்கக்கூடிய புதிய லோனை பாதிக்கலாம்.

கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு: EMI பேமெண்ட்களை செலுத்த தவறும் பொழுது அது கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கப்படும். எதிர்காலத்தில் லோன்கள் அல்லது கிரெடிட் விண்ணப்பங்கள் செய்ய நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நினைவூட்டும் போன் கால்கள் மற்றும் மெசேஜ்கள்: நீங்கள் பேமெண்ட் செலுத்த தவறிவிட்டால் அதனை உங்களுக்கு நினைவூட்டும் விதமாக போன் கால்கள், மெசேஜ்கள் அல்லது இமெயில்கள் அனுப்பப்படும். இதன் பிறகும் நீங்கள் பேமெண்ட் செலுத்தாவிட்டால் உங்களுக்கு எச்சரிக்கை கடிதம் எடுக்கப்படும்.

அபராதமாக வட்டி வசூலிக்கப்படும்: ஒரு சில வங்கிகள் நிலுவையில் இருக்கக்கூடிய தொகைக்கு வட்டியை அபராதமாக விதிக்கும். இது பொதுவாக வழக்கமான EMI விகிதத்தை காட்டிலும் அதிக வட்டி விகிதத்தில் வசூலிக்கப்படும்.

சட்ட ரீதியான நடவடிக்கை: அடிக்கடி மற்றும் நீண்ட நாட்களுக்கு பேமென்ட் செலுத்த தவறும் பொழுது உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து முதலில் உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பிறகு சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அடமானத்தை கைப்பற்றுதல் (செக்யூர்டு லோன்கள்): ஒருவேளை நீங்கள் லோன் வாங்குவதற்கு உங்கள் வீட்டையோ அல்லது வாகனம் போன்ற எதையாவது அடமானமாக காட்டி இருந்தால் லோன் ஒப்பந்தத்திற்கு உட்பட்டு அதனை கைப்பற்றுவதற்கான உரிமை வங்கிக்கு உண்டு.

எனவே நீங்கள் லோன் EMI பேமெண்ட் செலுத்த தவறிவிட்டால், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி விடுவது நல்லது. ஒருவேளை உங்களுக்கு பேமெண்ட் செலுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வங்கியிடம் பேசி, உங்கள் சூழ்நிலையை விவரித்து, தவணை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்.

லோன் பெற்ற கஸ்டமர்களுக்கு RBI வழங்கும் நிவாரணம்

லோன் EMI செலுத்த தவறியவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று RBI தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 1, 2024 முதல் செலுத்தப்படாத லோன் பேமெண்ட்களுக்கு வட்டிகளை வசூலிக்க கூடாது என்று RBI அறிவிப்பு விடுத்துள்ளது.

No comments