Breaking News

காலாண்டு தேர்வுக்கு முழுவதும் தமிழகம் ஒரே பொது வினாத்தாள் - பள்ளிக் கல்வித்துறை


6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் காலாண்டு தேர்வுகள் துவங்க உள்ளது. 11-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.15ம் தேதி துவங்க உள்ளது.

காலாண்டு தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு விரைவில் வர இருக்கிறது. அதில் இந்த ஆண்டு காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வினாத்தாளை கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வடிவமைத்து காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பொதுவினாத்தாள் முறை மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது. வழக்கமாக ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment: