பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2023:
திருக்குறள் :
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை
குறள் :241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
விளக்கம்:
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
பழமொழி :
Be slow to promise but quick to perform
ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
கண்ணுக்கு கண் தண்டனை என்ற இருந்தால் இந்த உலகம் மொத்தமும் குருடாகி விடும் - மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
விடை: சர்.சி.வி ராமன்
2. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது?
விடை: நாமக்கல்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி விதை : நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆகஸ்ட்18
நேதாஜி அவர்களின் நினைவுநாள்
1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை
மகிழ்ச்சி தான் வாழ்க்கை.
ஒரு பறவை இறைவனைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பிரார்த்தனை செய்தது.
இறைவனும் மனமுருகி பறவைக்கு
காட்சியளித்தார்
இறைவனைக் கண்டதும் பறவை வணங்கிப் பணிந்து நின்றது.
என்னை எதற்காக அழைத்தாய் என்று
இறைவன் கேட்டார்.
மகிழ்ச்சியான ஒரு நாளில் என்னை படைத்தவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதுதான் அழைத்தேன் என்றது பறவை.
நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?
ஆம் என்று சொன்னது பறவை.
உனக்கு ஏதும் வரம் வேண்டுமா? என்று பறவையைப் பார்த்து இறைவன் கேட்டார்.
என்னைப் படைக்கும் போதே வரம் தந்து விட்டீர்களே.
என் சிறகுகளைத் தவிர சிறந்த வரம் எது இறைவா? என்று கேட்டது பறவை.
நீதி:
உன்னிடம் இருக்கும் உன் திறமைகளைக் கண்டறிவதே உன் வாழ்வின் மகிழ்ச்சி.
இன்றைய செய்திகள்
No comments