Breaking News

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ். விடுப்பு பயணச் சலுகை விதிகளில் மாற்றம்.

 

7ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பயணச் சலுகை விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சமீபத்தில் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. விடுப்பு பயணச் சலுகை எனப்படும் LTC (Leave Travel Concession) தொடர்பான புதிய விதிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்று தான். LTC இன் கீழ் ரயில் பயணம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய LTC விதிகள் 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.

மத்திய சிவில் சேவைகள் (விடுப்பு பயணச் சலுகை) விதிகள் 1988ன் கீழ் LTC விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அலுவலக குறிப்பாணையை DoPT வெளியிட்டுள்ளது. இனிமேல், விடுப்பு பயணச் சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் கேட்டரிங் கட்டணத்தை மத்திய அரசு ஊழியர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய இரயில்வேயில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இந்த விருப்பத்தை தேர்வு செய்தால் LTC இன் கீழ் கேட்டரிங் கட்டணங்களைத் திரும்பப் பெறலாம்.

விமான நிறுவனங்கள் விதிக்கும் ரத்து கட்டணங்கள் மற்றும் மூன்று அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (IRCTC, BLCL, ATT) தங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் ரத்து கட்டணங்களையும் திருப்பிச் செலுத்தும் வசதியையும் அரசாங்கம் வழங்குகிறது. இது ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் என்றே கூறலாம். இந்த புதிய விதிகள் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதோடு மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மற்றொரு பம்பர் போனஸ் கிடைக்க உள்ளது. அகவிலைப்படியை மீண்டும் ஒருமுறை மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு உள்ளது. இந்த முறை அகவிலைப்படியை (Dearness Allowance) மீண்டும் 4 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் ஊழியர்களுக்கான டிஏ 46 சதவீதத்தை எட்டும். இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியமும் உயரும்.

மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மீண்டும் ஒருமுறையும் DA உயர்வு இருக்கும். டிஏ அதிகரிப்பால், ஊழியர்களின் சம்பளமும் உயரும். தவிர, ஊழியர்களின் ஹெச்ஆர்ஏவும் கூட உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

No comments