Breaking News

வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை சுத்தம் செய்ய ஈசி டிப்ஸ்... இதை ஃபாலோ பண்ணி பாருங்க..!

உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். ஆனால் அந்த தண்ணீரை அசுத்தத்துடன் குடித்தால், அதுவே உங்களை நோய்வாய்ப்படுத்தும்.

வீடு, அலுவலகம், பள்ளி அல்லது பயணத்தின் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது பொதுவானது. அவ்வாறு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்களை 2 நாட்களுக்கு ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைப்பது அவசியம். இதை சரியாக செய்யாவிட்டால் உள்ளே பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து நோய்களை உருவாக்கலாம். சிலருக்கு, பாட்டிலின் உள்ளே சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே மேலோட்டமாக கழுவிவிடுவார்கள். இதுவும் ஆபத்தனதே... எனவே பாட்டிலின் உட்புறத்தையும் சுத்தம் செய்ய இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க.


பாட்டிலில் தண்ணீர் ஊற்றவும் - முதலில் பாட்டிலில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவ சோப்பை சேர்க்கவும். இப்போது அதை நன்கு குலுக்கி விட்டு 2 முதல் 4 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.


ஸ்க்ரப் - இப்போது பிரஷ் உதவியுடன் பாட்டிலை நன்றாக தேய்க்கவும். கீழே சேர்த்து, சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாட்டிலின் மூடியையும் தேய்க்கவும்.


கழுவி உலர வைக்கவும் - இப்போது பாட்டிலை ஓடும் நீரில் நன்கு குலுக்கி அலசவும். பின் தண்ணீரை நன்கு வெளியேற்றிவிட்டு வெயில் படும் இடத்தில் காய வையுங்கள். காய்ந்ததும் மூடி போட்டு வைத்துவிடுங்கள்.

 
ப்ளீச் மூலம் ஆழமான சுத்தம்- பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா போட்டு குளிர்ந்த நீரை பிடித்துக்கொள்ளுங்கள். இப்போது அதன் மூடியை மூடி நன்றாக குலுக்கவும். இரவு முழுவதும் இப்படியே விடவும். காலையில் எழுந்ததும் பிரஷ் மூலம் தேய்த்து சுத்தம் செய்து நன்றாகக் கழுவவும்.
வினிகருடன் சுத்தம் செய்யுங்கள்- இரவில் பாட்டிலில் அரை கப் வினிகர், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் குளிர்ந்த நீரை கலக்கவும். பிறகு காலையில் குலுக்கி பாட்டில் பிரஷ் மூலம் நன்றாக தேய்த்து சுத்தம் செய்யவும். பின்னர் அதை தண்ணீரில் கழுவி துடைக்கவும்.

No comments