Breaking News

இதய செயலிழப்பு: 24 மணி நேரத்திற்கு முன்பே இந்த அறிகுறிகள் ஏற்படும்! - ஆய்வில் முக்கியத் தகவல்கள்:

 


தய செயலிழப்பு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே அறிகுறிகள் உணரப்படுவதாகவும் இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுவதாகவும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
மாரடைப்பு(heart attack) மற்றும் இதய செயலிழப்பு(Cardiac Arrest) என்பது சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படக்கூடியது. சில மணி நேரமோ அல்லது சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ ஒரு சில அறிகுறிகள் இருக்கலாம். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் (Cedars-Sinai Medical Center) உள்ள ஸ்மிட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்(Smidt Heart Institute) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 24 மணி நேரத்திற்கு முன்பே இதய செயலிழப்புக்கான அறிகுறிகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். பெண்களுக்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்பு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அதேநேரம் ஆண்களுக்கு நெஞ்சு வலி(Chest pain) ஏற்படுவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.
 மேலும் ஆண்கள், பெண்கள் அடங்கிய ஒரு குழுவினர், படபடப்பு, வலிப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்கின்றனர். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பாதிப்பைக் குறைக்கும், இது இதய செயலிழப்பு மரணத்தைத் தடுப்பதற்கான புதிய கண்டுபிடிப்பு என்று ஆய்வின் மூத்த ஆசிரியரும் இதய நோய் நிபுணருமான சுமித் சுக் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் முடிவுகள் 'தி லான்செட் டிஜிட்டல் ஹெல்த்'(The Lancet Digital Health) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. திடீர் இதய செயலிழப்பு ஒழுங்கற்ற இதயத் துடிப்பினால் இதயம் தனது அனைத்து செயல்பாடுகளையும் இழப்பதே திடீர் இதய செயலிழப்பு. உடனடியாக முதலுதவி அல்லது சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணம் ஏற்படும். திடீர் இதய செயலிழப்பு ஏற்படும்பட்சத்தில் சிபிஆர் எனும் அவசர சிகிச்சை பயன்படுகிறது.

ஏஇடி எனும் கருவி மூலமாக இதயத்திற்கு அதிர்ச்சி கொடுக்கப்படுகிறது. | குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!! மாரடைப்பு என்பதும் இதய செயலிழப்பு என்பதும் ஒன்றல்ல. இதயத்தில் அடைப்பு காரணமாக இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படுவது மாரடைப்பு.

அதாவது இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ திடீர் இதய செயலிழப்பும் ஏற்படலாம். அதுவே இதயம் முழுவதுமாக துடிப்பதை நிறுத்தி தனது செயல்பாடுகள் அனைத்தையும் இழப்பது இதய செயலிழப்பு. இதனால் உடனடியாக நினைவிழப்பு, சுவாச இழப்பு ஏற்படும். திடீர் இதய செயலிழப்பு - அறிகுறிகள் ♦ திடீரென சரிந்து விழுவது ♦ இதயத்துடிப்பு இல்லாமை ♦ மூச்சுத்திணறல் ♦ நினைவு அல்லது உணர்விழப்பு ♦ மார்பு பகுதியில் அசௌகரியம் ♦ பலவீனம் மற்றும் சோர்வு ♦ படபடப்பு

No comments