Breaking News

புது ரூல்ஸ்.. செப்.14-ஆல் திண்டாடும் மக்கள்.. உங்க ஆதார் கார்டுல இதை உடனே பண்ணிடுங்க.. இல்லனா அபராதம் இருக்கு!

 

ந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஆனது 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளை அப்டேட் செய்யாமல் வைத்திருக்கும் மக்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி கெடு விதித்துள்ளது.

இந்த கார்டுகளை புதுப்பிக்க அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அபதாரம் கட்ட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதனால் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் முக்கிய அடையாள சான்றாக ஆதார் அட்டை (Aadhaar Card) மாறிவிட்டது. பேங்க் அக்கவுண்ட் தொடங்கி அரசின் திட்டங்கள் வரையில் பெற வேண்டுமானால், இப்போது ஆதார் கார்டு கட்டாயமாக இருக்கிறது. இதனால், அதில் கொடுக்கப்படும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இப்போது மட்டுமல்ல பிற்காலத்திலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, ஆதார் விவரங்களை தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டியது அவசியமானது. இந்திய தனித்துவ அடையாள ஆணையமும் இப்படி அப்டேட் செய்வதற்கு உத்தரவிட்டு அதற்காக கால அவகாசம் வழங்கி வருகிறது. இப்போது, அந்த அவகாசம் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதியோடு முடிகிறது. இதற்குள் அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டும்.

ஏன் அப்டேட் செய்ய வேண்டும்? அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் கார்டை பெற்றுவிட்டு, அதன்பிறகு அதில் எந்தவித விவரங்களையும் மாற்றாமல் வைத்திருப்பதால், போட்டோ, முகவரி உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டு இருக்காது. இதனால், ஆதார் கார்டை அடையாள சான்றாக பல்வேறு இடங்களில் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல முகவரி, மொபைல் எண், இமெயில் ஆகியவற்றை அப்டேட் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஓடிபி போன்ற வெரிபிகேஷன்களை செய்ய முடியாமல் போகலாம். மேலும், சிலர் தங்களது பிள்ளைகளுக்கு சிறுவயதில் ஆதார் கார்டு வாங்கிவிட்டு, அவர்கள் வளர்ந்த பிறகும் அப்டேட் செய்யாமல் இருப்பார்கள் இவர்களும் அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

இப்படி பல்வே அப்டேட்கள் செய்யப்படாமல், கோடிக்கணக்கான ஆதார் அட்டைகள் இருக்கின்றன. இவர்களை அப்டேட் செய்ய வைக்க அதற்கான கட்டணங்கள் இலவசமாக்கப்பட்டுள்ளன. இந்த இலவச அப்டேட்டுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் அப்டேட் செய்யாவிட்டால் ரூ.50 அபராதம் செலுத்தியே விவரங்களை புதுக்க வேண்டும்.

எப்படி அப்டேட் செய்வது? ஆதார் அட்டையில் பெயர், முகவரி, இமெயில் ஐடி, மொபைல் நம்பர் அல்லது போட்டோக்களை மாற்ற வேண்டும் என்றால், ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் (Aadhaar Enrolment Centre) அல்லது ஆதார் சேவா கேந்திராவுக்கு (Aadhaar Sewa Kendra) நேரடியாக சென்று, அங்கு கொடுக்கப்படும் படிவத்தை நிரப்ப வேண்டும்.

அல்லது மத்திய அரசின் யுஐடிஏஐ (UIDAI) வெப்சைட்டுக்கு சென்று, ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) டவுன்லோட் செய்து, அதை நிரப்பிய பிறகு நேரடியாக சென்று விவரங்களை மாற்றி கொள்ளலாம். ஒருவேளை விவரங்கள் சரியாக இருந்து பல ஆண்டுகளாக அப்டேட் செய்யவில்லை என்றால் பின்வரும் முறைகளை ஆன்லைனிலேயே செய்துகொள்ளுங்கள்.

மை ஆதார் (myAadhaar) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். ஆதார் நம்பர் மற்றும் ஓடிபி கொடுத்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது அடையாள சான்று மற்றும் இருப்பிட சான்றுக்கான விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு அதற்கான ஆவணங்களை ஆன்லைனில் சமர்பித்து அப்டேட் செய்ய வேண்டி இருக்கும்.

ஆகவே, இப்போது டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களது விவரங்கள் காண்பிக்கப்படும். இதை மீண்டும் சரிபார்த்துவிட்டு, மேலே உள்ள விவரங்கள் சரியானவை என்பதை நான் உறுதி செய்கிறேன் (I verify that the above details are correct) என்ற டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அடையாள சான்றுக்கு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வோட்டர் ஐடி உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதேபோல இருப்பிட சான்றுக்கு பேங்க் பாஸ்புக், மின் கட்டண பில், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும். இதை செய்து முடித்தால், ஆதார் அப்டேட் செய்யப்பட்டுவிடும். இதை செய்யவில்லை என்றால், ஆதார் கார்டு செயலிழந்து விடாது. ஆகவே, பதற்றம் வேண்டாம்.

No comments