Breaking News

பகுத்தறிவில் பிஎச்டி.. ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம்! மகா விஷ்ணுவை தெறிக்க விட்ட 'சங்கர்'

 


தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம். பள்ளி மாணவிகள் முன்னிலையில் பாவம் புண்ணியம் என பிற்போக்குத்தனமாக அவர் பேசிய பேச்சு அவரை கம்பி எண்ண வைத்து இருக்கிறது.

அதே நேரத்தில் மற்றவர்கள் அமைதியாக இருக்க ஆசிரியர் சங்கர் மகாவிஷ்ணுவை விருந்தினர் என்றும் பார்க்காமல் புரட்டி எடுத்தார். இதையடுத்து பார்வை மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

அசோக் நகர் - சைதாப்பேட்டை அரசு பள்ளியில் கடந்த நாட்களுக்கு முன்பு ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து தற்போது ஆன்மீகப் பேச்சாளர் அவதாரம் எடுத்திருக்கும் மகா என்ற மகாவிஷ்ணு கலந்து கொண்டு பேசினார்.

நடிகர் தாமு போல மாணவிகளை கண்களை மூடி தியானம் போல அமர வைத்து பின்னணியில் பாடலை ஒளிபரப்பி அவர்களை கண்ணீர் மல்க கதற வைத்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவம் புண்ணியம் தான் தற்போது ஏழைகளாகவும் மாற்றுத்திறனாளிகளாகவும் பிறக்க காரணம் என அவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது .

ஒரு லட்சம் ரூபாய் அரசு பள்ளிக்கு டொனேஷனாக கொடுத்துவிட்டு ஆன்மீகப் பேச்சு என்ற பெயரில் பிற்போக்குத்தனமாக பேசியதாலும் விருந்தினர் என்ற முறையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதல் ஆசிரியர்களை அமைதி காத்தனர். ஆனாலும் அப்பள்ளியின் தமிழ் ஆசிரியரான பார்வை மாற்றுத்திறனாளி சங்கர் மகாவிஷ்ணுவை இடைமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பள்ளி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என ஆசிரியர் சங்கர் பேச பிறகு ஏன் தன்னை அழைத்தீர்கள் என ஹீரோயிசம் காட்ட முயற்சித்தார் மகாவிஷ்ணு. ஆனாலும் பள்ளிகளில் ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தக் கூடாது என வாக்குவாதம் செய்தார்.

எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது என மிரட்டும் வகையில் பேசிய மகாவிஷ்ணு தனக்கு இது பெருமை என்பது போல அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் விதைத்த விதையே அவருக்கு வினையாகி போனது. தொடர்ந்து மகாவிஷ்ணுவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது ஆசிரியரை மிரட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் சங்கரை நேரில் அழைத்து பாராட்டி தனக்கு அருகே அமர வைத்து பேசினார்.

தொடர்ந்து தான் பேசிய போது மகாவிஷ்ணு எனது பெயர் என்ன கேட்டதோடு தனது சாதி மதம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கேள்வி கேட்டதாகவும் பரபரப்பு புகாரை முன் வைத்தார் சங்கர்.

இப்படி எல்லாம் சங்கர் பேச காரணம் அவர் கற்ற கல்விதான்.. பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களில் மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றவர் சங்கர். தமிழ் துறையில் பல பட்டங்களை பெற்ற அவர் பகுத்தறிவில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேச்சு தான் அவரை யாராக இருந்தாலும் எதிர் கேள்வி கேட்க வைத்துள்ளது என சிலாகிக்கின்றனர் நெட்டின்சன்கள்.


1 comment:

  1. பகுத்தறிவு,
    என்பதை விளம்பரத்திற்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல,
    ... அறம்,
    இரக்கம்
    சார்ந்த நெறி உரை ஆற்றிய மஹாவிஷ்ணு வின்,
    கருத்தியலில் முரன்படுபவர்கள்,
    ... அதை கடந்து சென்று விடலாம்,அதைவிட்டு ஏனவரை
    சட்டத்தை தவறாக பயன்படுத்தி
    பழி வாங்க வேண்டும்???

    ReplyDelete