Gratuity Calculation: ஊழியர்களே..! கிராட்சுவிட்டி பற்றி தெரியுமா? பெரும் தொகையை ஈட்டுவது எப்படி? தகுதிகள் என்ன?
Gratuity Calculation: ஊழியர்களுக்கான கிராட்சுவிட்டி எனப்படும் பணிக்கொடையை பெற, தகுதிகள் என்ன என்பது விவர்க்கப்பட்டுள்ளது.
கிராட்சுவிட்டி (அ) பணிக்கொடை கணக்கீடு:
அரசு சமீபத்தில் கிராட்சுவிட்டி எனப்படும் பணிக்கொடை தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இந்த விதி பணிக்கொடை மீதான வரி தொடர்பானது. 20 லட்சம் வரையிலான வரியில்லா பணிக்கொடை தொகையின் வரம்பு தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிறுவனம் அல்லது முதலாளியிடம் இருந்து பணியாளர் பெறும் தொகை இதுவாகும். இதற்கு பணியாளர் குறைந்தபட்சம் 5 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவது கட்டாயமாகும். வழக்கமாக இந்த தொகை ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது அவர் ஓய்வு பெறும்போது வழங்கப்படும். ஒரு ஊழியர் ஏதேனும் காரணத்தால் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து காரணமாக வேலையை விட்டு வெளியேறினாலோ கூட, அவர் அல்லது அவரது நாமினி (கிராட்சுட்டி நாமினி) கருணைத் தொகையைப் பெறுவார்.
பணிக்கொடைக்கான தகுதி என்ன?
கிராட்சுவிட்டி பேமெண்ட் சட்டம் 1972ன் விதிகளின்படி, அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடையை பெறலாம். 5 வருடத்திற்கும் குறைவான காலகட்டத்திற்கு பணியாளர் ஒரு நிறுவனத்தில் பண்யாற்றினால், அவர் இந்த பலனை பெற தகுதியற்றவர். 4 ஆண்டுகள் 11 மாதங்களில் வேலையை விட்டு வெளியேறினாலும் பணிக்கொடை வழங்கப்படுவதில்லை. இருப்பினும், திடீர் மரணம் அல்லது விபத்து காரணமாக பணியாளர் வேலையை விட்டு வெளியேறினால் இந்த விதி பொருந்தாது. ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்த பிறகு, ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே கூட பயனாளர் பணிக்கொடையை பெறலாம்.
பணிக்கொடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
மொத்த பணிக்கொடை தொகை = (இறுதி சம்பளம்) x (15/26) x (நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை).
உதாரணமாக, நீங்கள் 7 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களின் இறுதிச் சம்பளம் ரூ. 35000 (அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உட்பட), அதனடிப்படையில், (35000) x (15/26) x (7) = ரூ. 1,41,346. அதாவது உங்களுக்கு ரூ.1,41,346 பணிக்கொடையாக வழங்கப்படும்.
கணக்கில் 15/26 என்றால் என்ன?
ஒரு வருடத்தில் 15 நாட்களின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது. அதே நேரத்தில், மாதத்தில் 26 நாட்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றன. ஏனென்றால் 4 நாட்கள் விடுமுறை என்று நம்பப்படுகிறது. பணிக்கொடை கணக்கீட்டில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியர் 6 மாதங்களுக்கு மேல் பணிபுரிந்தால், அது ஒரு வருடமாக கணக்கிடப்படும். ஒரு ஊழியர் 7 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் பணிபுரிந்தால், அது 8 ஆண்டுகளாகக் கருதப்பட்டு, இந்த அடிப்படையில் பணிக்கொடைத் தொகை கணக்கிடப்படும். அதே நேரத்தில், ஒருவர் 7 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் பணிபுரிந்தால், அது 7 ஆண்டுகளுக்கு மட்டுமே கருதப்படும்.
No comments