Breaking News

B.Ed தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: கலந்தாய்வு அக்.14-ல் தொடங்குகிறது

1319308
 

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்றுவெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வு அக்.14-ம்தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி

ஆண்டில் (2024-25) மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.16-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2,187 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கல்லூரி கல்விஇயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.30) வெளியிடப்படுகிறது.

அக்.23ல் வகுப்பு தொடக்கம்: இதைத்தொடர்ந்து, விரும்பும்கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்.14-ம் தேதிதொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்.23-ம் தேதி தொடங்குகிறது.

No comments