Breaking News

நாடு முழுக்க.. பல ஆயிரம் பேருக்கு.. இரவோடு இரவாக போன நல்ல செய்தி.. பென்சன் உயரப்போகுது!

 


பென்ஷன் ஆன் ஹையர் வேஜஸ் எனப்படும் அதிக ஊதிய (PoWH) ஓய்வூதிய திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள 97,640 PF (Provident Fund) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கான பென்ஷன் தொகை வழங்கப்பட உள்ளது.

கோரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபர்களின் எண்ணிக்கையுடன் (89,235) ஓய்வூதியம் செலுத்தும் ஆணைகள் (பிபிஓ) வழங்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை (8,401) சேர்த்து மொத்தமாக 97,640 PF (Provident Fund) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 2022 இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் பெற.. அதாவது PoWH திட்டத்திற்கு தகுதியுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கான பென்சன் தொகை வழங்கப்பட உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அளித்த பதிலில் இருந்து இந்தத் தகவல் கூறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பாபு என்பவர் இது குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில், 2014 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு நாடு முழுக்க வெறும் இரண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே PoWH திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 8,399 பேர் இதன் பயனை பெறவில்லை. இந்த நிலையில்தான் விரைவில் 97,640 PF (Provident Fund) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் PoWH திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்சனில் மாற்றம்; சமீபத்தில்தான் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சன் திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு: இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல.. கூடுதலாக.. பென்சனுடன் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதி ஆகும். அதாவது 25 ஆயிரம்.

எனவே மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் அரசு ஊழியருக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்திற்கு கணக்கிடலாம்.

இப்போது உள்ள முறை என்ன? : நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். அதை மத்திய அரசு பல இடங்களில் முதலீடு செய்யும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

எப்போது தொடங்கும்: அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.

No comments