Schools Holiday: மாணவர்களுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பிற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை திருத்தப்பட்ட நாட்காட்டியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில், பள்ளியின் வேலை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், 1 முதல் 12ம் வகுப்புக்கான தேர்வு காலங்கள், உயர்க்கல்விக்கான வழிகாட்டு வகுப்புகள், விடுமுறை போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
அதில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக உயர்த்தப்பட்டிருந்தது. குறிப்பாக 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக உயர்த்தப்பட்டிருந்தது. குறிப்பாக 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 220லிருந்து 210ஆக குறைக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 16 முதல் 23 வரை நடைபெறும் எனவும், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக, ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 9 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் எனவும், ஏப்ரல் 28 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments