Breaking News

Google Pay, Phonepe அடிக்கடி யூஸ் பண்றீங்களா..? ரூ.2000-க்கு 18% வரி..!! அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?

 


செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கூகுள் பே, போன் பே போன்ற இடைத்தரக நிறுவனங்கள் மூலம் ரூ.2000 வரை மக்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு அந்த இடைத்தரகர்களிடம் (கூகுள் பே, போன் பே போன்றவை) ஜிஎஸ்டி வரியை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், ரூ.2000 கீழ் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான் அதிகம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2000 வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக சிறிய பரிவர்த்தனைகள் கொண்ட வணிக நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மீதான பரிவர்த்தைகளுக்கு வரி விதிக்க ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ரூ‌.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments