Breaking News

புது ரூல்ஸ்.. அக்.15 அமல்.. Google Pay, PhonePe-க்கு இதுதான் லிமிட்.. இதுக்குமேல அனுப்ப முடியாது.. என்ன வருது!

 

க்டோபர் 1ஆம் தேதி வந்தால் போதும், சிம் கார்டு தொடங்கி ஆதார் கார்டு வரையில் பல்வேறு புதிய விதிகளுக்கு கட்டுப்பட வேண்டி இருக்கிறது.

ஆகவே, இதை மட்டுமே மக்கள் அறக்க பறக்க பேசி வருகின்றனர். ஆனால், அக்டோபர் 15ஆம் தேதி அமலாக இருக்கும் யுபிஐ லிமிட் விதிகள் (UPI Limit Rules) ஆனது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ ஆப்களுக்கு நேரடியாக வருவதால் இதையே முதலில் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரி கிடையாது. இதனாலேயே, சூப்பர் மார்கெட் தொடங்கி பெட்டி கடை வரையில் யுபிஐ ஆப்களை (UPI Apps) பேங்க் கஸ்டமர்கள் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஆகவே, இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை செய்வதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது குறிப்பிட்ட லிமிட்டை விதித்தது. அதாவது, யுபிஐ மூலம் மருத்துவ கட்டணம், கல்வி கட்டணம் மற்றும் அரசுப் பத்திரங்களுக்கான கட்டணம் ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே அதிகபட்சமாக செலுத்த முடியும் என்று லிமிட் விதிக்கப்பட்டது.

இதற்கு மேல் கட்டணம் செலுத்தினால், பேங்க் மூலம் அனுப்ப வேண்டும். ஆகவே வரியும் விதிக்கப்படும். இதனால், இந்த லிமிட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன்படி ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக லிமிட்டை அதிகரித்தது. இதை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India - NPCI) அமலாக்கியது.

ஆனால், இந்த லிமிட்டை அதிகரித்தை போல வரி செலுத்துவோருக்கான லிமிட்டையும் மாற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கைகள் எழுந்தன. ஏனென்றால், வருமான வரி செலுத்துவோர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலுத்தினால், அதற்கு ஏற்ப கூடுதலாக வரி செலுத்த வேண்டும். இது கூடுதல் வரியை அவர்களுக்கு கொடுக்கிறது. இதுவே யுபிஐ ஆப்கள் மூலம் செலுத்தும்போது, அந்த வரி கிடையாது.

ஆனால், யுபிஐ மூலம் வரி செலுத்தும் போது ரூ.1 லட்சம் வரையில் மட்டுமே அதிகபட்சமாக செலுத்த வேண்டும் என்ற லிமிட் இருப்பதால், அதற்கு மேல் வருமான வரி செலுத்தினால், கூடுதல் வரியை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு வருமான வரி செலுத்துவோர் தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாகவே, இந்த லிமிட்டையும் அதிகரிக்க ஆர்பிஐ முடிவு செய்து இருந்தது.

ஆகஸ்ட் 8ஆம் தேதியில் வருமான வரி செலுத்துவோருக்கான லிமிட் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால், அன்றைய தினம் அந்த புதிய லிமிட் விதிகள் அமலுக்கு வரவில்லை. அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அக்டோபர் 15ஆம் தேதி அமலாக்குகிறது.

ஆகவே, அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி செலுத்துவோர் யுபிஐ மூலம் அதிகபட்ச வரி தொகையை செலுத்தலாம். ரூ.5 லட்சம் வரையில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ ஆப்கள் மூலம் செலுத்தி கொள்ளலாம். இந்த 5 லட்சத்துக்கு எந்தவித வரியும் கூடுதலாக வசூலிக்கப்படாது. ஆகவே, இந்த தேதிக்காக வரி செலுத்துவோர் காத்திருக்கின்றனர்.

மேலும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் சிம் கார்டுகளில் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை தடுக்க புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் மூலம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள் மூலம் கஸ்டமர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டுமானால், அவர்களது நம்பரை அனுமதிப்பட்டயலில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் எஸ்எம்எஸ் மறுக்கப்படும்.

No comments