Breaking News

வீட்டில் ஒருவர் கூட சமைப்பதில்லை.. மாதம் 2,000 ரூபாய் செலவு.. வைரலாகும் கிராமம்..!!

 

ரு வீட்டில் சமையலறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இன்று பெரும்பாலானோர் வீட்டின் சமையலறையில் பெண்கள் அதிக நேரம் செலவிடுதும் உண்டு.
ஆனால், இந்தியாவில் சமையல் கூடம் இருந்தாலும் வீட்டில் ஒருவர் கூட சமைக்காத கிராமம் உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம், நம் இந்தியாவில் அப்படி ஒரு கிராமம் உள்ளது. அது பல ஆண்டுகளாக உலகளாவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.அந்த வகையில், குஜராத்தில் உள்ள சந்தங்கி (Chandanki)கிராமத்தைப் பற்றியது. சந்தங்கி கிராமம் மெஹ்சானா மாவட்டத்தில் பெச்சராஜி தாலுக்காவில் அமைந்துள்ளது.

இங்கு வீட்டில் யாரும் சமைப்பதில்லை. இந்த கிராமம் அதன் தனித்துவமான நடைமுறையால் இப்போது கவனம் பெறுகிறது.ஒரு காலத்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சந்தங்கியில் இன்று சுமார் 500 கிராம மக்கள் உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தில் ஆண்களின் எண்ணிக்கை 117 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 133 ஆகும். ஆனால் தற்போது கிராமத்திற்கு வேலைக்காக வந்தவர்கள் உட்பட குறைந்தது 1,000 பேர் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் தங்கள் வீடுகளில் சமைக்கவில்லை என்றால், இங்குள்ளவர்கள் தினமும் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?அவர்கள் தனிப்பட்ட சமையலறைகளுக்குப் பதிலாக ஒரு சமூகக் கூடத்தில் சந்தித்து கொள்கின்றனர். இங்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுகிறது. இதனால், அங்குள்ள பெண் தாய்மார்கள் சமைப்பதில் விடுதலை அடைந்துள்ளனர். அனைவருக்கும் சுவையான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதே இந்த கருத்தாக்கத்தின் நோக்கமாகும்.

இங்கு பாரம்பரிய குஜராத்தி உணவுகளை வழங்க ஒவ்வொரு நபரும் மாதம் 2,000 ரூபாய் செலவு செய்கிறார்கள்.இங்குள்ள சர்பாஞ்ச் புனம்பாய் படேல் என்பவர் இந்த உணவு முறையைத் தொடங்கினார். 20 வருடங்கள் நியூயார்க்கில் வாழ்ந்த அவர், மீண்டும் கிராமத்திற்கு வந்து பெரியவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டார். குழந்தைகள் வேலைக்காக நகரங்களுக்குச் செல்வதால், முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்து வருவதை அவர் உணர்ந்தார்.முதியவர்கள் உணரும் தனிமையைப் போக்கவும், அன்றாட வாழ்க்கையை ஆதரிக்கவும் மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் படேல் இந்த வகுப்புவாத உணவு பாரம்பரியத்தை நிறுவியதாக சொல்லப்படுகிறது. இந்த வழியில் எல்லோரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரே இடத்தில் கூடுகிறார்கள்.

உணவு பரிமாறும் போது ஒருவருக்கொருவர் பேசிகொண்டு, யோசனைகளையும் பகிர்ந்து கொள்வது இது கிராமத்தை உற்சாகமாக வைத்திருக்கிறது.தனிமையில் பலர் வசிக்கும் கிராமத்தில் சமுதாய கூடம் முக்கியமான ஒன்று கூடும் இடமாக மாறியது. இப்போது கிராம மக்கள் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். எனவே எந்த வீட்டிலும் சமையலறையில் சமைக்க வேண்டிய அவசியமில்லை. கிராமத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கும் உணவு பரிமாறுகிறார்கள். இதனால், சந்தங்கி அதன் தனித்துவமான பாணி மற்றும் பாரம்பரியத்துடன் இந்தியா முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த மாதிரியான ஒரு நிகழ்வு நமது ஊரிலும் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments