பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு.. இரவோடு இரவாக போன ஷாக்.. மத்திய அரசு திடீர் பிளான்? என்ன நடக்குது?
8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த கமிஷனை அமைக்காமல் மத்திய அரசு தள்ளி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயத்தில் இந்த கமிஷன் அமைய சில வருடங்கள் கூட தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளது..
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த கமிஷன் தொடர்பான அறிவிப்பு எதையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் எதையும் வெளியிடவில்லை. 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
மத்திய அரசு; விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்படும். அவர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது. இது 54 ஆக உயரலாம். அதேபோல் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுவே 8வது கமிஷன் திட்டம் இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த கமிஷனை அமைக்காமல் மத்திய அரசு தள்ளி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயத்தில் இந்த கமிஷன் அமைய சில வருடங்கள் கூட தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
ஏன் அமையாது?: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் வந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கடுமையான நிதி சுமை ஏற்படும். அப்படி இருக்க.. ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் ஏற்கனவே நல்ல பலன்களை அனுபவிக்கிறார்கள். இதனால் 8வது ஊதியக்குழு கூடுதல் சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.
ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சன் திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல.. கூடுதலாக.. பென்சனுடன் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதி ஆகும். அதாவது 25 ஆயிரம்.
எனவே மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் மொத்தமாக அரசு ஊழியருக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்திற்கு கணக்கிடலாம்.
இப்போது உள்ள முறை என்ன? : நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். அதை மத்திய அரசு பல இடங்களில் முதலீடு செய்யும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
No comments