பொள்ளாச்சி: ஒழுங்காக படிக்காத மாணவரை கண்டித்த ஆசிரியர் போக்சோவில் கைது:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம், கடந்த 03.09.2024 ஆம் தேதி மாலை தமிழ் வகுப்பில் ஆசிரியர் சுரேஷ் குமார் என்பவர் புறநானூறு செய்யுளை பார்த்து அனைவரையும் நோட்டில் எழுத சொன்னதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவன் ஆசிரியர் சொன்னதை தவறுதலாக புரிந்து கொண்டு, மற்றொரு செய்யுளை தனது நோட்டில் எழுதியுள்ளார்.
இதனை பார்த்த ஆசிரியர் சுரேஷ்குமார் மாணவனை கண்டித்து உள்ளார். மேலும் மாணவன் வேண்டுமென்று இதை செய்வதாக எண்ணி மாணவனின் கன்னத்தில் அறைந்தும். கையால் நெஞ்சு மற்றும் வயிற்றில் குத்தியும் பரிச்சை அட்டையால் முதுகில் இரண்டு அடி அடித்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவன் வலி தாங்க முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வெளி நோயாளியாக சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக மாணவனின் பெற்றோர் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை பேர் மேற்கொண்டு வருகின்றனர். மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் காரமடையை அடுத்த கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த மகன் அய்யாசாமி (வயது 39) என்பவர் வந்து வகுப்பு எடுத்துள்ளார். அப்போது ஏழாம் வகுப்புக்கு அவர் பாடம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அந்த ஆசிரியரிடம் எங்கள் வகுப்பிற்கு எப்போது பாடம் எடுக்க வருவீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு ஆசிரியர் அய்யாசாமி, இரவு 11 மணிக்கு வருகிறேன் பாய் எடுத்து வை என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அந்த மாணவி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மூலம் பெரியநாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் பேசியது உண்மை என்று தெரிய வந்ததன் பேரில் அய்யாசாமி மீது காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments