வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் - ஆசிரியராக மாறிய பள்ளி மாணவி - நடந்தது என்ன?
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின்போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதில் டிட்டோ ஜாக் அமைப்பினரின் கோரிக்கை குறித்து திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால்தேர்தலில் கொடுத்து வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோஜாக்) இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், புதூர் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஐந்து யூனியனில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் அமர்ந்திருக்கின்றனர்.இந்த நிலையில் கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் வரவில்லை என்பதால் மாணவி ஒருவர் சக மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தினார்.
No comments