'அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து; இதை சாப்பிடுங்க மக்களே!': மருத்துவர் சிவராமன்
நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்கள் என்று சித்த மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
நம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க கீழ்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச் சத்து அத்திப்பழம், பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை உள்ளிட்ட பழ வகைகளில் உள்ளது. முருங்கை கீரையில் நிறைந்துள்ளது. எள்ளுப் பொடியிலும் அதிக அளவில் உள்ளது. எனவே உணவில் அடிக்கடி எள்ளுப் பொடி சேர்த்துக் கொள்வது நல்லது.
அடுத்து கம்பஞ்சோறில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக அரிசியை விட எட்டு மடங்கு இரும்புச் சத்து கம்பஞ்சோறில் உள்ளது. எனவே கம்பஞ்சோறை வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அசைவம் உண்பவர்கள் ஆட்டு மண்ணீரல் எனப்படும் சுவரொட்டியை சாப்பிடலாம். இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள், ரத்த ஓட்டம் சரியாக இல்லாதவர்கள் வெள்ளாட்டு சுவரொட்டி சாப்பிடுவது நல்லது. கோழி ஈரலிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே ஈரலை ஒதுக்காமல் சாப்பிடுவது நல்லது. இப்படி இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொண்டால் நமது ரத்து ஓட்டம் நன்றாக இருக்கும். இவ்வாறு சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
No comments