ஸ்கூல் யூனிபார்மில் போலீசாரிடம் புகராளிக்க வந்த சிறுவன்.. அவன் கேட்ட ஒரு கேள்வி தான் உலகம் முழுக்க வைரல்..
பொதுவாகஇணையத்தளத்தில்இன்றுஇந்தஉலகத்தின்எந்த மூலை முடுக்கில்என்னசம்பவம்நடந்தாலும்அவை உடனடியாகஉலகஅளவில் கவனம் ஈர்ப்பதற்கு சமூ க வலைத்தளங்கள் மிகப்பெரிய ஒரு கருவியாக இருந்து வருகிறது . முன்பெ ல்லாம் ஒரு சம்பவம் நடந்தால் அ வை உலகெங்கிலும் உள்ள மக்களை சென்று சேர்வதற்கு செய்தித்தாள் உள்ளிட்ட ஒரு சில வாய்ப்புகள் மட்டும் தான் இருந்தது.
ஆனால் தற்போது சமூக வலைதளத்தின் வளர்ச்சி மிகப்பெரிய ஒரு தாக்கத்தை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதால் எந்த சம்பவங்களும் வைரல் ஆவதற்கு நீண்ட நேரம் தேவைப்படாது. மிகக் குறுகிய நேரத்தில் அந்த வீடியோவிலோ அல்லது செய்திகளிலோ வித்தியாசமான அல்லது சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தால் உடனடியாக அவை பலரது மத்தியிலும் கவனத்தைப் பெற்று பேசு பொருளாகவும் மாறும்.
அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறுவன் செய்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருவதுடன் மட்டுமில்லாமல் மிக முக்கியமான ஒரு பிரச்சனை பற்றி பேசும் பொருளாகவும் அமைந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில் ஒரு சிறுவன் ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்து கொண்டு அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் புகார் ஒன்றை கொடுக்கவும் செல்கிறார்.
வேன் ஒன்றில் இருக்கும் போலீசார் அவர்களைநோக்கிவந்த சிறுவன், தனது கோழி ஒன்று காணாமல் போனதாகவும் அதனை கண்டுபிடித்து தருமாறும் புகார் ஒன்றை கொடுக்கிறார். இதனை வண்டியில் இருந்த போலீஸ் அதிகாரியே வீடியோ எடுத்து வெளியிட்டதால் பெரிய அளவில் பேசுப்பொருளாகவும் மாறி உள்ளது.
அவர்கள் தங்களது தாய் மொழியில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள அந்த சிறுவனிடம் எஃப்ஐஆர் புகார் செய்யும்படியும் போலீசார் வேடிக்கையாக கேட்கின்றனர். உடனடியாக அந்த சிறுவனும், “எஃப்ஐஆர் செய்வதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?” என கேட்க போலீஸாரோ இது இலவசம் தான் என்றும் தெரிவிக்கிறார்.
சிறுவனின் வெள்ளந்தியான பேச்சு அதிக அளவில் கவனம் பெற்றுவரும்அதே வேலையில், போலீசார் நிறைய மக்களுக்கு பொதுமக்கள் இடம் இருந்து பணத்தை லஞ்சமாக பெறுவார்கள் என்பதை மறைமுகமாக அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டதும் பெரிய அளவில் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் வரும் போலீசார் நல்ல மனிதனாக இருந்தாலும் நிஜத்தில் பணம் வாங்குவார்கள் என்பதை சிறுவர்களும் அறிந்து வைத்துள்ளனர் என்பதை குறிப்பிட்டு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments