Breaking News

நீங்க ஏர்டெல் கஸ்டமரா..? உங்ககிட்ட இந்த கார்டு இருந்தா போதும்... ரீசார்ஜ் மூலம் நிறைய பணம் சேமிக்கலாம்!

 


ர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் ஆஃபரை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கேஷ் பேக்கை பெறுவது எப்படி மற்றும் அது சம்பந்தமான பிற முக்கியமான தகவல்களை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகரித்துள்ளதால் அனைத்து பிளான்களும் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே அனைத்து கஸ்டமர்களும் தங்களுடைய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை விட மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் ஆபரேட்டர்களை தேடி வருவதாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் யூசர்களுக்கு குறிப்பிடத்தக்க கேஷ்பேக் வழங்குவதற்காக ஒரு தொலைதொடர்பு நிறுவனம் ஸ்பெஷல் கேஷ்பேக் ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் ஏர்டெல் யூசர் என்றால் ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்யும் ரீசார்ஜில் இருந்து உங்களுக்கு 25% கேஷ் பேக் கிடைக்கும். இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஸ்பெஷல் கேஷ்பேக் ஆஃபரை பயன்படுத்துவதற்கு நீங்கள் ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பேமெண்ட் செலுத்த வேண்டும். இந்த கிரெடிட் கார்டில் வேறு சில அம்சங்களும் உள்ளன.

ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு உள்ளாக கார்டு ஆக்டிவேஷன் செய்பவர்களுக்கு 500 ரூபாய் மதிப்பிலான காம்ப்ளிமென்ட்ரி அமேசான் வவுச்சர் வழங்கப்படும். ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலமாக ஏர்டெல் மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், பிராட்பேண்ட் மற்றும் Wi-Fi பேமெண்ட்களை செலுத்தும் கஸ்டமர்களுக்கு 25% கேஷ்பேக் கிடைக்கும். இதில் ஒருவர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 250 ரூபாய் வரை கேஷ்பேக்காக பெறலாம்.

: உங்கள் பேங்க் அக்கவுண்ட் செயலற்றதாகி விட்டதா? மீட்டெடுப்பது எப்படி? படிப்படியான வழிமுறைகள்...

மேலும் மின்சார கட்டணம், கேஸ் மற்றும் தண்ணீர் பில் போன்ற பேமெண்ட்களை ஏர்டெல் தேங்ஸ் அப்ளிகேஷன் மூலமாக செய்யும் ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு யூசர்களுக்கு 10% கேஷ் பேக் வழங்கப்படுகிறது. இதிலும் ஒரு நபருக்கு ஒரு மாதத்தில் 250 ரூபாய் அதிகபட்சமாக கேஷ்பேக் கொடுக்கப்படும்.

இந்த கார்டை பயன்படுத்தி Swiggy, Zomato மற்றும் Bigbasket போன்றவற்றில் பொருட்களை வாங்கும் யூசர்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கும். இதில் ஒரு மாதத்தில் 500 ரூபாய் வரை அதிகபட்ச கேஷ்பேக் பெறலாம். கூடுதலாக ஒரு சதவீத கேஷ்பேக்கை கார்டுஹோல்டர்கள் கிளைம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் உள்ளூர் ஏர்போர்ட் லாஞ்சில் இலவசமாக தங்கும் வசதியை இந்த கார்டு ஹோல்டர்கள் பெறுகிறார்கள்.

: கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும்..? பலரும் செய்யும் ஒரே தவறு இதுதான்

ஆனால் இதனை ஒரு வருடத்தில் 4 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும் இந்த வசதியை பயன்படுத்துவதற்கு ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கடந்த 3 மாதங்களில் ஒருவர் 50,000 ரூபாய் மதிப்பிலான ட்ரான்ஸாக்ஷன்களை கட்டாயமாக செய்திருக்க வேண்டும்.

No comments