Breaking News

இந்திய ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யுபிஎஸ்சி நடத்து சிடிஎஸ் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: Combined Defence Service Examination (I) 2022

1. லெப்டினன்ட் (Indian Military Academy, Dehradun)

காலியிடங்கள்: 100

2. லெப்டினன்ட் (Indian Naval Academy, Ezhimala)

காலியிடங்கள்: 22

3. லெப்டினன்ட் (Air Force Academy, Hyderabad)

காலியிடங்கள்: 32

4. லெப்டினன்ட் (Officers’ Training Academy, Chennai (Madras) SSC (Men)

காலியிடங்கள்: 170

5. லெப்டினன்ட் (Officers Training Academy, Chennai SSC (Women)

காலியிடங்கள்: 17

வயதுவரம்பு: 02.01.1999 - 01.01.2004-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.


தகுதி: இயற்பியல், கணிதம் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், ஏதாவதொரு ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி ஆல் நடத்தப்பட்டும் சிடிஎஸ் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் போது தேலையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2021

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

 www.upsconline.nic.in

என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2022

மேலும் விவரங்கள் அறிய

 www.upsconline.nic.in

 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments