Breaking News

அஞ்சலகத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா ? மாதம் ரூ.1400 கட்டினால் உங்களுக்கு ரூ. 35 லட்சம் கிடைக்கும்..!

 


ஞ்சலகத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா ?

இதில் யார் யாரெல்லாம் இணைக்கலாம்? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது போன்ற முமையான விவரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கிராம சுரக்ஷா திட்டம்

அஞ்சலகத்தின் இந்த கிராம சுரக்ஷா திட்டம அரசு ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், கிராமப்புற ஊழியர்களுக்கும் பயனளிக்க கூடிய விதத்தில் வழங்கப்படுகிறது. இது பி எல் ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ என இரு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் இரண்டாவது திட்டமான ஆர்பிஎல்ஐ கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

அஞ்சலகத்தின் இந்த கிராம சுரக்ஷா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயதிலானவர்களுக்கு காப்பீட்டினை வழங்குகிறது. இதில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 10,000 ரூபாயாகும். அதிகபட்ச காப்பீடு என்பது 10 லட்சம் ரூபாயாகும்.

இந்த திட்டத்தில் 4 வருடத்திற்கு பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பாலிசியினை மூன்று வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். இந்த பாலிசியினை 5 வருடத்திற்கு முன்பு சரண்டர் செய்தால், போனஸ் கிடையாது. இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்த 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் வசதிகள் உண்டு. இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு.

நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால், இந்தத் திட்டத்தை தாரளமாக தேர்ந்தெடுக்கலாம்.

தனி நபர் ஒருவர் 19 வயதில் 10 லட்சம் ரூபாய்க்கான தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான பிரிமீயம் 1515 ரூபாயாகும். இதே 58 வருடம் எனில் 1463 ரூபாய் பிரிமீயமாக இருக்கும். அதுவே 60 வயதில் 1141 ரூபாயாகவும் இருக்கும்.

55 ஆண்டு திட்டத்தில் முதிர்வு தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே 58 ஆண்டு திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக முதிர்வு தொகையாக இருக்கும்.எனவே, சிறு முதலீடு மூலம் லட்சக்கணக்கான வருவாயை பெறலாம்.

இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். கிராம மக்களுக்கானது. கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்தங்கிய மக்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலிசியை எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இதில் வழங்கப்படுகிறது. இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

இதில் கடன் வசதி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே கடன் கிடைக்கும்.அவசர காலங்களில், 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.5 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பை மூடினால் போனஸுக்கு தகுதியில்லை.

No comments