Breaking News

SBI வங்கி கணக்கு இருக்கா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. கையில் எந்த Mobile இருந்தாலும் சரி.. இது மஸ்ட்

 

நிச்சயமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கால்வாசி பொதுமக்களிடம் ஒரே ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (State Bank Of India) வங்கி கணக்கு கட்டாயமாக இருக்கும்.

அப்படி உங்களிடமும் எஸ்பிஐ வங்கியின் (SBI Bank) கணக்கு இருக்கிறதென்றால், இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான் மக்களே. வீட்டில் இருந்தபடியே உங்கள் SBI வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அனுமதிக்கும் 6 எளிமையான ஆன்லைன் சேவையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் இதை அறிந்துகொள்வது கட்டாயம் பயனளிக்கும்.

எஸ்பிஐ வங்கி இந்தியா (SBI bank India) முழுக்க பரந்திருக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள பல ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. என்ன தான் பல ஆன்லைன் (Online) சேவைகளை SBI வங்கி வழங்கி வந்தாலும், வடிக்கையாளர்களால், அடிக்கடி அதிகளவில் பயன்படுத்தப்படும் சேவையாக பேலன்ஸ் செக்கிங் (balance checking) மற்றும் மினி ஸ்டேட்மென்ட் (mini statement) சேவை மட்டுமே திகழ்கிறது.

எஸ்பிஐ வங்கி கணக்கு பேலன்சை எப்படி ஆன்லைனில் செக் செய்வது? (How to check SBI bank account balance online):

எஸ்பிஐ வங்கி இப்போது ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் பியூச்சர் போன் பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடி அவரவர் வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு மிச்சமிருக்கிறது என்பதை காண அனுமதிக்கும் சேவையை வழங்கி வருகிறது. அதை எப்படி எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

1. எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை (SBI SMS Service):

இணைய சேவை இல்லாத நேரத்தில் மற்றும் உங்களிடம் ஸ்மார்ட்போன் டிவைஸ் இல்லாத நேரத்தில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து '09223766666' என்ற எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை எண்ணிற்கு, கேப்பிட்டல் எழுத்தில் 'BAL' என்று டைப் செய்து SMS அனுப்பவும். சிறு வினாடிகளில் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறதென்று டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும்.

2. எஸ்பிஐ பேங்க் வாட்ஸ்அப் சேவை (SBI Bank WhatsApp Service):

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் இருக்கிறதென்றால், +919022690226 என்ற எண்ணை டயல் பேடில் டைப் செய்து காண்டாக்ட்டை முதலில் நீங்கள் சேவ் செய்ய வேண்டும். பிறகு வாட்ஸ்அப் ஓபன் செய்து, இந்த எண்ணிற்கு Hi என்று டைப் செய்து அனுப்பினால், பல ஆன்லைன் சேவைகள் காண்பிக்கப்படும். இதில் 'Get Balance' என்ற விற்பதை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கின் இருப்பு தொகை காண்பிக்கப்படும்.

3. எஸ்பிஐ யோனா ஆப்ஸ் (SBI YONO Apps):

இந்த மொபைல் ஆப்ஸ் இப்போது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது. இந்த ஆப்ஸை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து, லாகின் தகவல்களை உள்ளிட்டு MPIN செட் செய்துக்கொண்டால், உங்களுக்கு வேண்டிய நேரம் எல்லாம் எஸ்பிஐ வங்கியின் முழு ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் பேலன்ஸ் செக் செய்வது மட்டுமின்றி, பணம் அனுப்புவது, பெறுவது, வட்டி செலுத்துவது,லோன் எடுப்பது போன்று பல வேலைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

4. எஸ்பிஐ யோனோ லைட் ஆப்ஸ் (SBI Yono Lite app):

உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கல் இருக்கிறதென்றலோ அல்லது பழைய மாடல் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றாலோ, நீங்கள் கட்டாயம் எஸ்பிஐ யோனோ லைட் ஆப்ஸ் டவுன்லோட் செய்வது சிறப்பானது. மேற்கூறிய SBI YONO Apps இன் லைட் மொபைல் வெர்ஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் SBI வங்கியின் ஆன்லைன் சேவைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

5. எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங் (SBI Internet Banking):

SBI வாடிக்கையாளர்கள் https://retail.onlinesbi.sbi/retail/login.htm என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் இன்டர்நெட் பேங்கிங் சேவைக்கான பாஸ்வோர்டு மற்றும் லாகின் ஐடி விபரங்களை உள்ளிட வேண்டும். உள்நுழைவிற்கு பிறகு, Accounts கிளிக் செய்து, அதில் Balance விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் இருப்பு தொகை விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

6. டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ் (Digital Payment Apps):

Google Pay, PhonePe, BHIM போன்ற பேமெண்ட் ஆப்ஸ்களில் உங்கள் SBI வங்கி கணக்கை நீங்கள் இணைந்திருந்தால், Check Balance என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் உடனடியாக உங்கள் SBI கணக்கின் பேலன்ஸ் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் முறைகளை SBI வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்.

No comments