தமிழ்நாட்டில் இ-சேவை மையங்கள் ஆரம்பிக்க அருமையான வாய்ப்பு.. பிடிஆர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
இ-சேவை மையங்களை 20,000-லிருந்து 35,000 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி கண்டறிந்து இ-சேவை மையத்தை துவக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இ சேவை மையங்களை இன்னும் பரவலாக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை சிறப்பிக்க வேண்டும்.. எல்லா கிராமங்களில் வர வேண்டும் என்று எம்எல்ஏக்கள் ஐயப்பன், எஸ்எஸ் பாலாஜி, ஜிகே மணி, சதாசிவம் உள்ளிட்டோர் கோரியிருந்தார்கள்..
ஏற்கனவே சி ஆயிரமாக இருந்த இ சேவை மையங்களை , இன்றைக்கு 20000க்கு மேல் அதிகரித்து உத்தரவிட்டோம். அதை 35,000 ஆக உயர்த்த எங்களுக்கு திட்டம் உள்ளது. நகர்புறரங்களல் ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இ சேவை மையங்களை அமைய வேண்டும் என்று நினைக்கிறோம்.. இதேபோல் கிராமப்புறங்களில் 3 கிமீ தூரத்திற்குள் இ சேவை மையங்கள் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் யாரெல்லாம் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் தகுதி கண்டறிந்து கடன் உதவி அளித்த அமைக்க அரசு விரும்புகிறது" என்றார்.
இதனிடையே அரசின்அறிவிப்பு காரணமாக படித்த கிராமப்புற இளைஞர்கள் இந்த இசேவை மையத்தை கிராமங்களில் ஆரம்பிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த இசேவை மையங்களில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பாஸ்போர்ட் அப்ளை செய்வது, வங்கி கணக்கை ஆதார் உடன் இணைப்பது,பான் கார்டு பெற்றுத்தருவது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான பல்வேறு சான்றிதழ்களை பெற்றுத்தருவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆன்லைனில் பொதுமக்களுக்கு செய்து தர முடியும்.
அதற்கான சேவை கட்டணமும் வசூலிக்கலாம். நல்ல வேலைவாய்ப்பை கிராமப்புறங்களிலேயே பெற முடியும். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்க முடியும். இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டிருக்கிறது.
இதன் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அங்கு மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதுதான்.. இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி அரசு சொல்லும் காலக்கட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் மற்றும் கடவுச்சொல் (User Id & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்குவார்கள். மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை 'முகவரி' ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் (அல்லது) https://.tnega.tn.gov.in என்ற இணை யதளத்தில் பார்க்கலாம்.
No comments