Breaking News

நெட் பேங்கிங் பயன்படுத்துகிறீர்களா.. இந்த விஷயத்தை எல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க!

 

ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. பண பரிமாற்றங்களுக்காக பலர் நெட் பேங்கிங்கை (net banking) உபயோகிக்கிறோம்.

இதன் உதவியால் உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் பணத்தை அனுப்ப முடியும். என்னதான் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்தாலும், பணத்தின் பாதுகாப்பை பற்றி ஒரு சில அச்சங்கள் இருக்க தான் செய்கிறது. நீங்கள் நெட் பேங்கிங்கை பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ள முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களைத் திருடி அவருடைய வங்கியில் இருக்கும் அனைத்து பணத்தையும் திருடி விடுகின்றனர். AI தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஹாக்கிங் செய்வதற்கு தேவைப்படும் கோடிங் இணையத்தில் எளிதாகக் கிடைக்கிறது.

இதன் விளைவாக 2024-ஆம் ஆண்டில் மட்டும், அத்தனை மோசடி சம்பவங்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் நம்மால் நெட் பேங்கிங் மற்றும் பிற UPI தளங்களைப் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். நீங்கள் ஆன்லைன் பேமெண்ட் தளங்களைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் கீழ்காணும் சிலவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம்.பலவீனமான பாஸ்வேர்ட்: பலவீனமான மற்றும் அனைவராலும் எளிதில் யோசிக்க கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்தாதீர்கள்.

பெரும்பாலான மக்கள் "123456" மற்றும் "password" போன்ற எளிதான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகின்றனர். எழுத்துக்கள், எண்கள் மற்றும் "₹","@" போன்ற சிம்பல்களை சேர்த்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.பப்ளிக் ( public ) வைஃபை: அனைவராலும் உபயோகிக்க கூடிய இலவச வைஃபையை (wifi) பயன்படுத்தி எந்த ஒரு பணப் பரிமாற்றமும் செய்ய வேண்டாம். ஏனெனில் இது ஒரு பொதுவான வைஃபை. மக்கள் அனைவராலும் இதனை பயன்படுத்த முடியும், மேலும் இது குறைவான பாதுகாப்பை உடையது, இதனால் உங்கள் பண பரிமாற்றங்களை எளிதில் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆகையால் முடிந்தவரை மொபைல் டேட்டா அல்லது பாதுகாப்பான நெட்வொர்க்கை பயன்படுத்தி பண பரிமாற்றங்களை செய்யவும்.சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்தல்: உங்கள் வங்கியில் இருந்து வராத மெசேஜ்கள் மற்றும் லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். மேலும் பாப்-அப் விளம்பரங்களையும் கிளிக் செய்யாதீர்கள். இதனை கிளிக் செய்தால் ஹேக்கர்கள் பிஷிங் முறையை பயன்படுத்தி உங்களுடைய அனைத்து தகவல்களையும் திருடி விடுவார்கள்.சாப்ட்வேர் புதுப்பிப்புகளைப் புறக்கணித்தல்: உங்கள் மொபைலில் சாப்ட்வேர் அப்டேட் செய்யாமல் இருப்பது ஆபத்தில் போய் முடியலாம். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் ஆகியவை பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த சாப்ட்வேர் அப்டேட் அவசியமாகிறது.தனிப்பட்ட தகவலைப் பகிர்தல்: உங்களுடைய அக்கவுண்ட் நம்பர், பின், OTP ஆகியவற்றை யாரிடமும் தொலைபேசியின் மூலம் பகிர வேண்டாம்.

ஏனெனில் வங்கிகள் இந்த தகவல்களை மொபைல் மூலம் கேட்காது. மோசடி செய்பவர்கள் உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்வதற்கு இந்த தகவல்களை கேட்பார்கள்.சாதனங்களில் முக்கியமான தகவல்களைச் சேமிப்பது: சிலர் தங்களுடைய மொபைலில் வங்கியின் அக்கவுண்ட் நம்பரை சேவ் செய்து வைத்திருப்பார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். உங்கள் மொபைல் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த தகவல்களை எளிதில் கண்டுபிடித்து, உங்களுக்கு எதிராக மோசடிக்காரர்கள் பயன்படுத்த கூடும்.இந்த 6 முக்கிய குறிப்புகளை தவறாமல் பின்பற்றவும். மேலும் உங்கள் ஆன்லைன் அக்கவுண்டின் செயல்பாட்டை கண்காணிப்பது மிகவும் முக்கியம். இதில் எதாவது சந்தேகம் இருந்தால் வங்கியிடம் தொடர்பு கொண்டு அதனை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

No comments