Breaking News

எத்தனை வருட ஏக்கம்! தமிழக அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த குட் நியூஸ்.. எப்போ வருது தெரியுமா?

 


தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஆளும் திமுக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறதாம். வேறு ஒன்றும் இல்லை பழைய பென்ஷன் தொடர்பான அறிவிப்புதான் அது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

பல்வேறு திட்டங்கள்: இன்னொரு பக்கம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை

கர்நாடகாவில் நிறைவேற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அம்மாநில தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022 வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

வாக்குகள் கிடைக்கவில்லை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் கடும் அதிர்ப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.

அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர்.

எண்ணிக்கையின் படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு 1,11,150 வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 50, 241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகளும் கிடைத்துள்ளன.

பொதுவாக, திமுக 95 சதவீத வாக்குகளும், மீதமுள்ள 5 சதவீத வாக்குகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும். அதனால் திமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும், அடுத்த நிலையில் வருகிற அதிமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும் இடைவெளி பெருதாக இருக்கும். ஆனால், இந்த முறை பதிவான தபால் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல, தபால் வாக்குகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் பாஜக வந்துள்ளது.

இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தபால் வாக்கு களிலேயே திமுக 50 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 45 சதவீதம் மட்டுமே எடுத்திருக்கும் போது, வாக்குப் பதிவில் எந்தளவுக்கு திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வாக்களித்திருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கணக்கிட்டு, ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விவரித்துப் பேசுகிறார்கள். திமுகவுக்கு எதிரான மனநிலையில் அரசு ஊழியர்கள் இருந்திருப்பது மட்டுமல்லாமல், இரண்டாவது இடம் வருவதற்கேற்ப பாஜகவை அரசு ஊழியர்கள் ஆதரித்திருப்பதும் உற்று கவனிக்க வேண்டிய விசயம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, திமுக உற்று கவனிக்க வேண்டும் என்கின்றனர்.

தங்கம் தென்னரசு: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் உறுதி: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

எப்போது வரும்: அந்த வகையில் வரும் பட்ஜெட்டில்.. அதாவது பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் பற்றிய அறிவிப்பு வரும். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடக்கின்றன. பட்ஜெட்டில் பழைய பென்ஷன் பற்றி கூறுவார்கள் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் அரசு ஊழியர்களிடம் இழந்த ஆதரவை பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

No comments