Breaking News

8ஆம் வகுப்பில் பெயில்.. ஆனா இன்று 49,000 கோடி மதிப்புள்ள வங்கியின் உரிமையாளர்..!

 

சஞ்சய் அகர்வால் ஒரு சிறிய நிதி நிறுவனத்தை தொடங்கி 49,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வங்கியாக மாற்றி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்.தொழில் தொடங்க வேண்டும் என ஆர்வத்தில் இருக்கும் பலருக்கும் ஒரு முன் உதாரணமான ஒரு நபர் சஞ்சய் அகர்வால் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தலைவர்.இந்த வெற்றி இவருக்கு மிகச் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை.

பல்வேறு மேடு பள்ளங்களை கடந்து வந்து தான் இந்த உச்சத்தில் அமர்ந்திருக்கிறார் சஞ்சய் அகர்வால்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சஞ்சயை பெற்றோர் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்தனர். ஆனால் அவர் 8ஆம் தோல்வி அடைந்தார். எனவே அவரை ஹிந்தி மீடியத்தில் சேர்த்தனர். இங்கே சராசரி மதிப்பெண் பெற்ற இவருக்கு பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்.இந்த விளையாட்டு ஆர்வம் தான் இவருக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், அமைதி, ஒரு கடினமான சூழலை எப்படி கையாள்வது என பல்வேறு வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்துள்ளது.அஜ்மீரில் இருந்த கல்லூரியில் காமர்ஸ் பிரிவை எடுத்து பயின்றார்.

சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்பது தான் இவரது கனவு. ஆனால் அதை நிறைவேற முடியாமல் போனதை அடுத்து சரி நம்முடைய வேலையையாவது நாம் சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்.இதற்காக அவர் சி ஏ படிப்பை தேர்வு செய்து படிக்க ஆரம்பித்தார். சிஏ தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்தார். இருந்தாலும் கடின உழைப்புடன் படித்து அதில் தேர்ச்சி பெற்றார்.

இவருக்கு அப்போது மும்பையில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருந்து சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார். அப்படித்தான் தன்னுடைய 25 ஆவது வயதிலேயே அங்குள்ள உள்ளூர் தொழில் முனைவோர்களிடம் நிதி திரட்டி ஒரு சிறிய நிதி நிறுவனத்தை தொடங்கினார்.முதன்முதலாக அவர் வாகன கடன்களை வழங்கும் நிறுவனமாகத் தான் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக கார் லோன்களை வழங்கினார். பின்னர் லாரி நிறுவனங்களோடு இணைந்து லாரி வாங்குபவர்களுக்கு கடன் வழங்க தொடங்கினார்.2000 ஆம் ஆண்டிலிருந்து அவர் எச்டிஎப்சி மற்றும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் முதலீடுகளைப் பெற்று அதன்மூலம் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க்(AU Small finance bank) என்ற ஒரு வங்கியை தொடங்கினார்.கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நிதி நிறுவனம் ஒரு வங்கியாக மாற்றம் கண்டது. தற்போது இவரது வங்கி 30 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் 1000க்கும் அதிகமான இடங்களில் இந்த வங்கியின் கிளைகள் அமைந்துள்ளன.2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சஞ்சய் அகர்வாலின் நிகர சொத்து மதிப்பு 10,026 கோடி ரூபாய் ஆகும். தற்போது ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கிறது பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்களில் ஒன்றாகவும் செயல்பட்டு வருகிறது.

No comments