குட் நியூஸ்..! ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு..!
தமிழகத்தில் செயல்படும் 44 அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளிக் கல்வித் துறை உயர்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 44 பின்தங்கிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 308 பேருக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு.
இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ₹6,000-ல் இருந்து ₹12,000-ஆகவும், அலுவலக உதவியாளர், கூட்டுபவர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் ஆகிய பணியிடங்களுக்கு ₹4,500ல் இருந்து ₹10,000-ஆகவும் உயர்வு.
இதனால் ஆண்டு ஒன்றுக்கு ₹2.11 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு சுமார் 10 ஆண்டிற்கு பின்னர் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
No comments