Breaking News

இன்றே கடைசி தேதி... உடனே முந்துங்க... நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும்!

 


ன்று மட்டுமே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை ஆதார் கார்டுகளில் திருத்தங்களை எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் மேற்கொள்ளலாம்.
நாளை முதல் உங்கள் ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பெயர், விலாசம் திருத்தங்கள் இருந்தால் உடனே அதை செய்து முடிச்சிடுங்க. இந்தியக்குடிமகனின் அடையாளம் ஆதார். வங்கிக்கணக்கு தொடங்குவது முதல் ரேஷன் கார்டு , பள்ளியில் சேர்க்கை, வேலை வாய்ப்பு என அனைத்திலும் கட்டயாமாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான சேவையை அரசு இ சேவை மையங்கள் மூலம் கட்டணமில்லாமல் இலவசமாக புதுப்பித்து தருகின்றன.

இந்த சலுகை இன்று ஜூன் 14ம் தேதி வரை மட்டுமே. அப்டேட் செய்யாதவர்களின் ஆதார் கார்டு ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.ஆனால் அதில் உண்மையில்லை அதன்பிறகு இந்த இலவச சேவை ரத்து செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது. இலவசமாக புதுப்பித்துக் கொள்ள நாளை வரை மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் உடனடியாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments