மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த நிறுவன பங்குகள்..!
நாம்
முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த தளம் பங்குச் சந்தை. அதேசமயம் பங்குச்
சந்தை குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடு செய்வது
என்பது அனைவருக்கும் சாத்தியப்படாது.
அதேசமயம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் (பரஸ்பர நிதி நிறுவனங்கள்)
வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கொஞ்சம் எளிது மற்றும்
ரிஸ்க்கும் குறைவு என நம்பப்படுகிறது.தற்போது பரஸ்பர நிதி நிறுவனங்களின்
பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் அதிகளவில் முதலீட்டாளர்கள் முதலீடு
செய்து வருகிறார்கள். பரஸ்பர நிதி திட்டங்களில் இடம் பிடித்துள்ள சில
நிறுவன பங்குகள் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு 400 சதவீதத்துக்கு
மேல் ஆதாயத்தை கொடுத்துள்ளன. அவற்றில் சில பங்குகளை பார்க்கலாம்.பிரீமியர்
எஸ்பிளோசிவ்ஸ்: பாதுகாப்பு துறையை சேர்ந்த இந்நிறுவனம் ஏவுகணைகளில்
பயன்படுத்தப்படும் திட ப்ரோபெல்லண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிறுவன பங்கு குறிப்பிட்ட சில பரஸ்பர நிதி திட்டங்களில் மட்டுமே உள்ளது.எச்டிஎப்சி டிபென்ஸ் மற்றும் எச்டிஎப்சி இன்ப்ராஸ்ட்ரெக்சர் ஆகிய 2 பரஸ்பர நிதி திட்டங்களில் மட்டுமே இந்நிறுவனம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 850 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.2023 ஜூலை 3ம் தேதி இந்நிறுவன பங்கின் விலை ரூ.86 என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது (கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.754.20 என்ற அளவில் உள்ளது.டிரான்ஸ்பார்மஸ் அண்ட் ரெக்டிபயர்ஸ்: இந்நிறுவனம் நாட்டின் முன்னணி டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம் வலுவான நிதி நிலை முடிவுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சியை கொண்டுள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.500.28 கோடியும், நிகர லாபமாக ரூ.35.65 கோடியும் ஈட்டியுள்ளது.குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்த பங்குகளில் இதுவும் ஒன்று. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 698 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது (கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.725.20 என்ற அளவில் உள்ளது.கொச்சின் ஷிப் யார்ட்: கப்பல் கட்டுமானம் மற்றும் அதது சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் கொச்சின் ஷிப் யார்ட். தொடர்ந்து லாபம் சம்பாதித்து வரும் முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.3,645.28 கோடியும், நிகர லாபமாக ரூ.813.10 கோடியும் ஈட்டியுள்ளது.இந்நிறுவனம் கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு 654 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.2,212.60ல் முடிவுற்றது.ஜிஇ டி அண்ட் டி இந்தியா: இந்நிறுவனம் கிரிட் சொல்யூஷன்ஸ் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மின் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள், வர்த்தக நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 612 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,498.25ஆக இருந்தது.சக்தி பம்ப்ஸ்: இந்நிறுவனம் பல்வேறு விதமான பம்புகள் மற்றும் மோட்டார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 468 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் முந்தைய டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபாக ரூ.70.96 கோடி ஈட்டியிருந்தது. அதேசமயம் 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.40.90 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. கடந்த 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.3,665.15ஆக இருந்தது.

No comments