Breaking News

வருமான வரி ரிட்டர்ன் என்றால் என்ன! இது ஏன் முக்கியம்? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் என்ன?

 

நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமான வரி ரிட்டர்ன் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்.

வங்கியில் ஈஸியாக லோன் கிடைப்பது முதல் அரசு டெண்டர்கள் வரை இதன் மூலம் பொதுமக்களுக்கு என்ன லாபம் என்பது குறித்து இதில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் வருமான வரி செலுத்தும் வரம்பில் இருக்கும் அனைவரும் வருமான வரி ரிட்டர்ன் (Income Tax Return) கட்டாயம் தக்கல் செய்ய வேண்டும்.. குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு தனிநபரின் வருமானம், அதனுடன் தொடர்புடைய வரி குறித்த தெளிவான விவரங்கள் இதில் இடம்பெற்று இருக்கும்.

இந்தியாவில் நிதியாண்டு என்பது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கணக்கிடப்படுகிறது. இந்த நிதியாண்டில் ஒருவருக்கு எவ்வளவு நிதி வருகிறது. அதன் வருமான மூலம், செலவுகள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இருக்கும்.

யார் தாக்கல் செய்ய வேண்டும்: அதேநேரம் வருமான வரிக் கட்டும் வரம்பில் உள்ளவர்கள் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியும் என்று இல்லை. அந்த வரம்பில் வராதவர்களும் ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.. அது பல விதங்களில் நமக்கு நன்மை தரும். வரி ரிட்டர்ன் பெறுவது, இழப்புகளை அடுத்த நிதியாண்டிற்குக் கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு இது உதவும். மேலும், ரிட்டர்ன் தாக்கல் செய்வது வருமானச் சான்றாகவும் செயல்படும். நீண்ட கால நோக்கில் இது இப்படிப் பல விதங்களில் நமக்குப் பயன்படும்.

சரி இந்த வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது ஏன் அவசியம் என்பது குறித்துப் பார்க்கலாம். வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது பல நன்மைகளைத் தரும்.. முதலில் எளிமையாக வங்கிக் கடன் கிடைக்க இது உதவும்.. நீங்கள் தொடர்ச்சியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து இருந்தால் உங்களுக்கு எளிதாக லோன் கிடைக்கும்.

உரிமைகள்: அதேபோல பிக்ச்ட் டெபாசிட், வாடகை வருமானம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட சில இடங்களில் வரி பிடித்தம் அதிகமாகச் செய்யப்பட்டால் ரிட்டர்ன் மூலம் அதைத் திரும்பப் பெற முடியும். ஆதார் அட்டைகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் பெற ரிட்டர்னை வருமானம் மற்றும் முகவரிக்கான சான்றாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் தொடர்ச்சியாக ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளீர்கள் என்றால் நிதி ஸ்திரத்தன்மை நன்றாக இருக்கிறது.. நீங்கள் பொறுப்பான குடிமகன் என்பதை எடுத்துக்காட்டுகிறது. சில நாடுகள் விசா வழங்கக் கூட வருமான வரி ரிட்டர்ன் தாக்கலைக் கண்டிப்பாகக் கேட்கும். சில நாடுகள் ரிட்டர்ன் இருந்தால் முன்னுரிமை அளித்து விசா வழங்கும்.

நிதி இழப்புகள்: நிதி இழப்புகளைக் கணக்குக் காட்டவும் இது பயன்படும். அதாவது வரிப் பொறுப்புகளை ஈடுகட்ட முதலீடுகள், வணிகத்தில் வரும் இழப்புகள் அல்லது வாடகை செலவுகளைக் கணக்குக் காட்டலாம். ரிட்டர்ன் மூலமாகவே இதைக் கணக்குக் காட்ட முடியும்.

அரசு டெண்டர்கள்: அரசு டெண்டர்களுக்குத் தகுதிபெற ஒப்பந்தக்காரர்கள் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் ரிட்டர்ன்களை தாக்கல் செய்து இருக்க வேண்டும். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு எத்தனை வருமானம் இருந்துள்ளது என்பதையும் கணக்கில் கொண்டே அரசு டெண்டர்கள் வழங்கப்படும். உங்களுக்கான டெர்ம் இன்சூரன்ஸ் கவரேஜ் தொகையைத் தீர்மானம் செய்வதிலும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி இருக்கிறீர்கள் என்றால் எளிதாக முதலீடுகளைப் பெறவும் இது யூஸ் ஆகும்.

No comments