Breaking News

பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு.. ஆனந்த கண்ணீர்.. மத்திய அரசின் மிகப்பெரிய முடிவு.. இனி நிம்மதி!

 

மத்திய அரசு மூலம் இந்த மாதம் உயர்த்தப்பட உள்ள அகவிலைப்படி உடன் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாம்.

சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வருடம்.. ஜூலை மாதம் வரும் முன் மீண்டும் அகவிலைப்படி உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் அமலுக்கு வரும். கடந்த ஜனவரி முதலான அகவிலைப்படி உயர்வின் நிலுவை தொகை உட்பட 18 மாத நிலுவை அரியர் பட்ஜெட்டிற்கு முன் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். இந்த முறை பல்வேறு மாநில தேர்தலை மனதில் வைத்து அகவிலைப்படி 54 சதவிகிதமாக் உயர்த்தப்படும் என்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 50 சதவிகிதமாக உள்ள டிஏ 54 ஆக வாய்ப்புள்ளது.

No comments