Breaking News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு குட்நியூஸ்.. வந்தது முக்கிய அப்டேட்.. மிஸ் பண்ணாதீங்க


 

 

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது. .

நல்ல செய்தி; இதற்கான அதிகாரபூர்வ விடை குறிப்பு நேற்று வெளியானது. அரசு இணைய பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை தேர்வர்கள் தெரிவிக்க முடியும்.

வரும் 25-ஆம் தேதிக்குள் அதாவது 5 நாட்களில் தெரிவிக்க முடியும். உங்கள் கருத்துக்களை, புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மதிப்பெண் விவரம்; க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இனி அடுத்த மாதம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. குரூப் 4 போலவே இதிலும் இன்வாலிட்டி மதிப்பெண் முறையை தொடர உள்ளனர்.

No comments